சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்
Updated on : 14 March 2023

தான் நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது பெற்றதை பற்றி 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 



 



இது குறித்து அவர் கூறியதாவது: "இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 'நாட்டு நாட்டு' படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.



 



'நாட்டு நாட்டு' பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. 



 



இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, 'நாட்டு நாட்டு' இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது. 



 



தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!"

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா