சற்று முன்

2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி
Updated on : 22 March 2023

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை  தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 



1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 



 



இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில்,

“ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை.  இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார். 



 



KVN Productions வழங்கும் KD-The Devil  'கேடி தி டெவில்'  படத்தை இயக்குநர் பிரேம் இயக்குகிறார். துருவா சர்ஜா, ரவிச்சந்திரா, சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் நடிக்கும்,  இந்த பான்-இந்தியா பன்மொழி திரைப்படம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா