சற்று முன்

'செவ்வாய்கிழமை' ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம்   |    அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படைப்பு !   |    தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுகளை கூறும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'   |    ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டம்!   |    'சந்திரமுகி 2' க்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்!   |    ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பிரமாண்டமான புதிய திரைப்படம்!   |    திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? - சுப வீரபாண்டியன்   |    வேல்ஸ் சர்வதேச விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஷாட் பூட் த்ரீ' பட நடிகர்கள்!   |    துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!   |    நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் - இயக்குனர் ஜெயமுருகன்   |    'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்த ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை   |    இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வரும் 'ஜவான்'   |    'ஜவான்' படத்திற்காக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!   |    ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய இசை படைப்பு   |    திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்   |    ’டீமன்’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மிகுந்த மகிழ்ச்சியில் இயக்குனர்!   |    செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்!   |    ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரியில் ஜொலிக்கும் 'பட்டாசா..' ஜவான் பட பாடல்!   |    கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட பெரிய கதாநாயகர்கள் செய்வதில்லை - இயக்குநர் பேரரசு   |    11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடிகளை குவித்து புதிய சாதனையை படைத்துள்ள 'ஜவான்'   |   

சினிமா செய்திகள்

'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்
Updated on : 30 March 2023

ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.



 



படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது.

அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள். 



 



இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா