சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்
Updated on : 12 April 2023

கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.



 



2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில், வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.



 



இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும்  '22 யார்ட்ஸ்' அமைந்தது. 



 



பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்ஸ்போஷர் தேவைப்பட்டது. எனவே, அவர்கள் சொந்தமாக போட்டிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இது அவர்கள் சென்னை முழுவதும் தங்கள் சொந்த உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்தது.



 



'22 யார்'டில் இப்போது 5 + கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, இரண்டு ஃப்ளட்லைட் கிரிக்கெட் மைதானம் என்பது MAC ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக ஒரு தனித்துவமான வசதிகளுடன் கூடிய ஒன்று.



 



அனைத்து வீரர்களின் தகவல்களையும் கையாள, '22 யார்ட்ஸ்' பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது வீரர்களின் தகவல்களை உள்ளடக்கியதாகவும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து சரியான வாய்ப்புகளை தரவும் வழிவகுக்கும்.



 



"சுமார் 4 முதல் 5 வருடங்களாக அஷ்வினிடம் எங்களின் முன்னேற்றம் குறித்து நான் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறேன். எங்களுக்கு அவர் தனது பிஸியான காலத்திலும் நேரம் ஒதுக்கி ஆலோசனைகாலையும் தெரிவிப்பார்" என்கின்றனர்.



 



ப்ரித்தி அஷ்வினின் திறமையான தலைமையில் '22 யார்ட்ஸ் ஜென் நெக்ஸ்ட்'   பயிற்சியளிக்கப்பட்டு, பொருத்தமாக இருக்கும் திறமைசாலிகளுக்கு, உள்ளூர் லீக்குகளில் திறமையை வெளிப்படுத்தவும், ஆர். அஷ்வின் ஆதரவுடன் இந்த சீசனில் இருந்து பிரீமியர் லீக்களிலும் கூட கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 



 



பான் இந்தியா அளவில் விரிவுப்படுத்தும் வகையில் இந்திய வம்சாவளி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் '22 யார்'டில் முதலீடு செய்துள்ள முக்கிய தொகுப்பிலிருந்து எங்களது முதல் சுற்று நிதி திரட்டியுள்ளோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா