சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் 'வைரம் காஞ்ச கட்ட'
Updated on : 15 April 2023

ஆஸ்கார் விருது வென்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ் 'ஆவணப் படத்தை  வெளியிட பங்கு பெற்ற  நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட!



 



குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் 'வைரம் காஞ்ச கட்ட'.



 



இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்',  'நொடிக்கு நொடி' குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.



 



'இந்தியன் டூரிஸ்ட் ' குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில்   சாதனை முத்திரை பதித்தது. அது மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது. அதேபோல் 'நொடிக்கு நொடி' குறும்படம்



 



திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றது.இவர் உருவாக்கிய 'இவளை போல்' இசை ஆல்பம் டாப் டென் வெற்றி வரிசையில் இடம் பெற்றது.



 



அந்த சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் 'வைரம் பாஞ்ச கட்ட'. நாயகியாக யாஸ்மின் நடித்துள்ளார்.படத்தை எழுதி ,ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து  இயக்கியுள்ளவர் சுந்தர் மகாஸ்ரீ.சதீஷ் சாந்தி வாசன் இசையமைத்துள்ளார்.ராக் அண்ட் ரோல் புரொடக்சன் சார்பில் யாஸ்மின் பேகம் தயாரித்துள்ளார்.



 



இக்குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டி தங்கள் சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.



 



தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சி. வி. குமார், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சந்திரசேகர், சரவணன்,  சுரேஷ், ஜான்மேக்ஸ்,  ஜி.தனஞ்ஜெயன்,சனம் செட்டி, எஸ் பி சௌத்ரி போன்றவர்கள் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்கள்.



 



இக்குறும்படத்தை  வெளியிடும் உரிமையை ஏபி இன்டர்நேஷனல்  பெற்றுள்ளது. அந்த நிறுவனம்தான் ஆஸ்கார் விருது பெற்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ' படத்தை netflix வெளியிட்ட உறுதுணையாக இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து வெளியிட வாங்கி உள்ளது .இதன்மூலம் இப்படத்தின் தரத்தை அறியலாம்.



 



இந்த காமன்மேன் சதீஷ் நடிகர் ஷார்ட் பிலிம் இயக்குனர் விரைவில் திரைப்படம் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா