சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

ZEE5 தளத்தில் விரைவில் வெளியாகும் திரில்லர் வெப் சீரிஸ் “ஒரு கோடை Murder Mystery”
Updated on : 18 April 2023

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும்,  இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், “அயலி” , “செங்கலம்” வெப் சிரீஸ்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில்,  புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. 



 



Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார்  மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். 



 



பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட  இளைஞன் வியோம்,  அவனுக்கு தன்னுடன்  வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும்  தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால்  உடைந்து  போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக்  கண்டுபிடிக்க முயல்கிறான்.



 



பரபரப்பான திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராக, மலைநகர பின்னணியில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. 



 



நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான அனுபவம் தரும் “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் கண்டுகளியுங்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா