சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

'ஹனு-மேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது
Updated on : 18 April 2023

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனு -மேன்' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர்.



 



படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.



 



இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட அனுமன் சாலிசாவின் சக்தி வாய்ந்த காணொளி, இந்தியா முழுவதும் எதிர்பாராத அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க படக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



 



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகிறது. பான்- வேர்ல்ட் வெளியீடாக வரவிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். 



 



'ஹனு-மேன்' அடிப்படையில் அஞ்சனாத்திரி எனும் கற்பனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று, அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான்? என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்க, குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா