சற்று முன்
சினிமா செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஷ்ணு விஷால் !
Updated on : 03 May 2023

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!
ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார்
அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார்.
அந்த தடகள வீரர்கள் விவரம்:
1. Dheena dhayalan - Pole vault (கோலூன்றி தாண்டுதல்) - All India Inter University & Khelo india University Games Medalist.
2. Hemamalini - Javelin throw (ஈட்டி எறிதல்) - State, National & All India Inter University Medalist.
3. S.V. Arun kumar - 100,200mts (Sprinter) - State & All india Inter University Medalist.
4. P.Shandosh - 100,200mts (Sprinter) - State & All India Inter University Medalist.
5. Stalin Joes S - Decathlon - Senior state, All india inter University & Khelo India University games Medalist.
6. Dhivya.J - 400mts hurdle & 4×400mts relay - Senior State & Senior National Medalist, Junior State& Junior National Medalist , All India Inter University Medalist.
7. Mithra.M.R. - 5000mts & 10000mts (Long distance) - Junior State & Junior National Medalist,All India Inter University participant.
8. Arun Krishna V.B. - 800mts & 1500mts (Middle distance) - Junior State & Senior state Medalist, All india inter University Finalist.
9. M. Bhuvana Karthick - 400mts hurdle - State & South zone National Medalist.
10. M.Shyam Kumar - 3000mts - RDS School State Medalist & South Zone National Participant.
11. S. Harish - 800mts (Middle distance) - Junior State Medalist
மேற்கண்ட வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால், "விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என்றும், அதற்கென ஒரு நிரந்தர செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும்" தெரிவித்தார்.!
சமீபத்திய செய்திகள்
'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது.
இன்று, "தி பாரடைஸ்" படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய "வின்டேஜ்" அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் புதிய லுக், அவரது செல்லப்பெயரான "டைலாக் கிங்" க்கு ஏற்ப தத்ரூபமாக உள்ளது.
அழுத்தமான, சக்திமிகுந்த மற்றும் ஸ்டைலான இந்த வேடம், மோகன் பாபுவின் தனித்துவமான வசனங்களையும், தனித்துவமான நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தவிருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் படத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அவதாரத்தைத் தரப்போகிறது.
சுதாகர் செருகுரி தயாரிப்பில், எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். "தி பாரடைஸ்" படம் 2026 மார்ச் 26ஆம் தேதி உலகளவில் 8 மொழிகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டாடவிருக்கும் இந்த "பான்-வேர்ல்ட்" பிரம்மாண்ட படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை – விபின் பாஸ்கர்.
கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.
நடிகர் கண்ணா ரவி கூறுகையில்:
“வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.”
ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் C சேவியர் தெரிவித்ததாவது..,
“வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும் என்று நம்புகிறோம்.”
இயக்குநர் பவன் கூறுகையில்..,
“வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
காதல், துரோகம், மீட்பு நிறைந்த பயணம் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5-இல்!
இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு - வெங்கட் ராஜன், கலை இயக்கம் - சுதீர் மச்சர்லா
திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.
காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!
இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!
இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.
பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.
சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.
சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.
இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.
முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.
“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.
சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
நம் தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு மருதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதைக்களம் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு N R ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு B படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை A ராஜா கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், படத்தினை வரும் அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு 'திரெளபதி2' காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்" என்றார்.
தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, "தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது" என்றார்.
தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள 'திரெளபதி 2' படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம். போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.
அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'
ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் 'மெல்லிசை'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது 'மெல்லிசை'. 'வடசென்னை', 'விடுதலை' ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் 'மெல்லிசை' படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மற்றும் 'பொம்மை நாயகி' ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக 'மெல்லிசை' படத்தில் நடிப்பதன் மூலம் இந்தக் கதையின் ஆழத்திற்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் சேர்ப்பார்.
இவர்களோடு ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஆழமான உணர்வுகள், நுட்பமான கதை சொல்லல், கவிதைத்துவமான கதை என தலைமுறைகள் கடந்து, அன்பை தேடும் பிரபஞ்சத்தின் கதையாக வெளிவர இருக்கிறது 'மெல்லிசை'.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!
'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.
டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என 'அனகோண்டா' உறுதியளிக்கிறது.
இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் 'அனகோண்டா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'அனகோண்டா' திரைப்படத்தை வெளியிடுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா