சற்று முன்
சினிமா செய்திகள்
இறைவி படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
Updated on : 06 June 2016
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இறைவி படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இறைவி திரைப்படம், தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. எனினும் பல தயாரிப்பாளர்கள் இறைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவும் கூட கார்த்திக் சுப்புராஜிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது
ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது.
கேன்ஸ் விருது பெற்ற "ஆல் வி இமேஜின் அஸ் லைட்", அமேசான் வெப் சீரிஸ் "க்ராஷ் கோர்ஸ்", ஹிந்தி திரைப்படம் "மும்பைகார்" மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். "ஜன கண மன" மற்றும் "டிரைவிங் லைசென்ஸ்" படப்புகழ் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிக மிக முக்கியமான திருப்புமுனைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாறுப்பட்ட திரை அனுபவம் தரும் முரா திரைப்படம் நவம்பர் 8, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது
'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" திரைப்படம், நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த தொகை ராம் சரணின் சினிமா கேரியரில் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்மிகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி அன்று வெளியாகும் இப்படம், S.S. ராஜமௌலியின் "RRR" திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இப்படத்திலிருந்து "ஜருகண்டி" மற்றும் "ரா ரா மச்சா" ஆகிய இரண்டு உற்சாகமிக்க பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். "கேம் சேஞ்சர்" படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் ஏற்கனவே சிறப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் வட இந்திய விநியோக உரிமையை, அனில் ததானியின் AA பிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு "கேம் சேஞ்சர்" வட இந்தியாவில் மிக அதிகபட்ச திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது, அனில் ததானியின் வெளியீட்டில் இப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் என்பது, ராம் சரண் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
"கேம் சேஞ்சர்" படத்தில் ராம் சரண் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுகிறார். பாலிவுட் அழகி கியாரா அத்வானி நாயகியாகவும், நடிகை அஞ்சலி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளனர் மற்றும் பல பெரிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
தமனின் அற்புதமான பாடல்கள் மற்றும் அதிரடியான பின்னணி இசை, திருவின் வசீகரிக்கும் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது இப்படத்தின் எடிட்டிங்கை இரட்டையர்களான ஷம்மர் முகமது மற்றும் ரூபன் ஆகியோர் கையாள்கின்றனர்.
ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.
முன்னணி நட்சத்திர நடிகர்கள், வசீகரிக்கும் கதைக்களம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன், "கேம் சேஞ்சர்" ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக தயாராக உள்ளது, இப்படம் இப்பொழுதே நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா 26.10.2024 சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது,
“’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி,
“’புஷ்பா2’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் சிவா சார் என்னை சந்தித்து இந்தக் கதை சொன்னார். இவ்வளவு பிரம்மாணட கதையை சாத்தியமாக்கியது பெரிய விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா சாருடன் நெருங்கிப் பழகும் இந்த வாய்ப்பு இதில் கிடைத்தது. மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். பாபி தியோலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் நான் 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ’பாகுபலி’ படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. ’கங்குவா’ பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், “நான் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் ’கங்குவா’ படத்தைப் பற்றி அடிக்கடி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். ’கங்குவா’ படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ’கங்குவா’ படத்தின் ஐந்து நிமிட காட்சியை சூர்யா என்னிடம் காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம். ஆனால், அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ’கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் கருணாஸ்,
“சினிமாவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் எந்த இயக்குநருடனும் வேலை செய்யவில்லையே என்று வருத்தப்பட்டது இல்லை. ஆனால், ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்ததும், இவருடன் இணையவில்லையே என்று வருத்தப்பட்டேன். டையலாக் பேப்பர் கூட இல்லாமல் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால் அது சிவா தான் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் லொடுக்கு பாண்டியாக நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா. நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் சூர்யா. ’நந்தா’ படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட்,
“ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும். பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.
நடிகர் யோகிபாபு,
“சிவா சாருடன் ‘வீரம்’ படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன். அதன்பிறகு ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சி நடித்தேன். பின்பு அவர் சொல்லி ‘கங்குவா’ படத்தில் முழுவதும் நடித்திருக்கிறேன். சூர்யா சார் கடுமையான உழைப்பாளி. என் உடன்பிறந்த சகோதரர்தான். நீங்கள் அடுத்து உலக சினிமாவுக்கும் செல்ல வேண்டும்” என்றார்.
நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி,
“நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் ’காக்க காக்க’. அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’ இந்த படங்கள் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள். பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி. சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் சார் சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது” என்றார்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்,
“சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகன் தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்” என்றார்.
நடிகர் கார்த்தி,
“எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.
வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது, “நான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டபோது அவரும் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தால், ’கங்குவா’ படம் எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். இந்தப் படத்தை அடுத்து சிவா எனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார். வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர். இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர் சிவாவுடன் ’அண்ணாத்த’ என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றினேன். ஆனால், 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே! அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பப்படியே ’கங்குவா’ படம் அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.
விழாவில் பேசிய இயக்குநர் சிவா, "’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.
இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்" என்றார்.
கதையின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது,
“அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய 27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.
இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன். மன்னிப்பு ஒரு அழகான விஷயம் என்பதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்.
சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மா
'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய 'பூத்' திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் வெளியாகும் 'சாரி' திரைப்படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது. இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல த்ரில்லர் தருணங்களுடன் 'சாரி' இருக்கும்.
ஆர்வி புரொடக்ஷன் சார்பில் ராம் கோபால் வர்மா மற்றும் ரவி வர்மா தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
'நந்தன்' படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்... 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்' என பாராட்டினர். விமர்சகர்களும் 'நந்தன்' திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் - விமர்சகர்கள்- திரையுலகினர் - திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற 'நந்தன்' திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
'நந்தன்' திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் - இயக்குநர் இரா . சரவணன் - விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 'நந்தன் மிகத் தரமான.. தைரியமான... படம்' என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 'நந்தன்' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!
இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'கடைசி உலகப் போர் ' - தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான 'ஸ்வாக்' மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான 'லைக் எ டிராகன்: யாகுசா'. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்!
கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தற்போது இந்தியாவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு நகைச்சுவை நாடகமான 'ஸ்வாக்' - இந்த திரைப்படத்தில் மனமுடைந்த போலீஸ் அதிகாரியான எஸ்ஐ பவபூதி - தான் ஒரு செல்வந்தரின் வாரிசாக இருப்பதை கண்டுபிடித்து, குழப்பமான பரம்பரை போருக்கு செல்ல வேண்டும். நகைச்சுவை மற்றும் சூழ்ச்சிகளுக்கு இடையில் அவர் எதிர்பாராத வகையில் நட்பை உருவாக்கிக் கொண்டு, இழந்த உரிமையை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளதை கண்டறிகிறார். பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் இந்த தெலுங்கு நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
'லைக் எ டிராகன்: யாகுசா' எனும் திரைப்படம் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு என இரண்டு காலகட்டங்களில் பின்னணியில் உருவானது. இது ஒரு அசல் கிரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் தொடராகும். பயமுறுத்தும் வகையிலும், ஒப்பற்ற நிலையிலும்.. யாகுசா போர் வீரரான கசுமா கிரியுவின் வாழ்க்கையையும், அவரது குழந்தை பருவ நண்பர்கள் மற்றும் அவர் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் ஆகியவற்றையும் விவரிக்கிறது. நீதி- கடமை- மனிதாபிமானத்தின் வலுவான உணர்வு - ஆகியவற்றை கொண்டிருக்கும் ஜப்பானிய ஒரிஜினல் தொடரான இந்தத் தொடர் தற்போது பிரைம் வீடியோவில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி டப்பிங்குடன் ஜப்பானிய மொழியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மும்பை /அக்டோபர் 24 : பிரைம் வீடியோ இந்த வாரம் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட கன்டென்டுகளை கொண்டு வருகிறது.
கடைசி உலக போர்: 'தி லாஸ்ட் வேர்ல்டு வார் ' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட 72 நாடுகளால் உருவாக்கப்பட்ட குடியரசு எனும் புதிய சர்வதேச அமைப்பை சுற்றி இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. இது உலகில் மிகப்பெரிய அரசியல் எழுச்சிக்கும் வழி வகுக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த அனாதையான தமிழரசன்- முதலமைச்சரின் மகள் கீர்த்தனாவை காதலிக்கிறார். கீர்த்தனா தனது அரசியல் பயணத்தில் செல்வதற்கு தமிழ் உதவுவதால்... குடியரசு மற்றும் உள்நாட்டு அரசியல் சதிகளால் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை ரீதியிலான திரைப்படம் ..ஆக்சன் -நாடகம் -காதல்- ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உள்ளூர் கண்ணோட்டத்தில் உலகளாவிய நெருக்கடியை பற்றி தனித்துவமான பார்வையை வழங்குகிறது. அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமிழரசன் எனும் முக்கிய வேடத்தில் நடித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் இந்தியாவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தெலுங்கு நகைச்சுவை நாடகமான ஸ்வாக் : எஸ் ஐ பவபூதி எனும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படம் உருவாகி இருக்கிறது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை... மனைவியை பிரிந்த பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. ஆறுதலுக்காகவும் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தை தேடி.. ஷ்வாகனிக் வம்சத்தின் வழித்தோன்றலான இவர் குடும்பத்தின் செல்வத்திற்கு உரிமை கோருவதற்காக அதாவது அவருக்கு உரிமை உண்டு என்பதை தெரிவிக்கும் வகையிலான கடிதத்தை பெறுகிறார். பவபூதி தனது சூழ்நிலையின் சிக்கல்களை வழிநடத்தும் மற்றும் விசித்திரமான நபர்கள் அடங்கிய குழுவை சந்திப்பதால்.. திரைப்படம் ஒரு பரபரப்பான நகைச்சுவை படைப்பாக விரிவடைகிறது. தன்னை பற்றி அறிந்து கொள்ளுதல், நட்பு மற்றும் செல்வத்தின் மீட்பு உள்ளிட்ட விசயங்களை இப்படம் ஆராய்கிறது. இது நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸின் தனித்துவமான கலவையை கொண்டிருக்கிறது. ஹாசித் கோலி எழுதி இயக்கியுள்ள இந்த நகைச்சுவை திரைப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு, ரிது வர்மா, சுனில், மீரா ஜாஸ்மின், தக்க்ஷா நகர்கர், ரவி பாபு ,கெட் அப் சீனு, கோபராஜு ரமணா, சரண்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
'லைக் எ டிராகன் : யாகுசா' எனும் திரைப்படம் சாகா ( SEGA )வின் உலகளாவிய ஹிட்டடித்த கேம். இந்த விளையாட்டினை தழுவி லைவ் ஆக்சன் திரைப்படமாக உருவான திரைப்படம் இது.. மேலும் 2005 ஆம் ஆண்டில் சாகா( SEGA) வால் வெளியிடப்பட்டது. யாகுசா கேம் தொடர் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக உலகம் முழுவதும் கருதப்பட்டது. இது அதன் இலக்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. இந்தத் தொடர் தீவிரமானதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது ஒரு பெரிய பொழுதுபோக்கு மாவட்டத்தில் வாழும் கமுரோச்சா - வன்முறை ஷின்ஜுகு வார்டின் சுபகிச்சோவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான மாவட்டமாகும்.. லைக் எ டிராகன்: யாகுசா எனும் இந்தத் திரைப்படம் விளையாட்டினை மையப்படுத்தியது. நவீன ஜப்பானையும், கடந்த கால விளையாட்டுகளால் ஆராய முடியாத பழம் பெரும் கசுமா கிரியு போன்ற தீவிரமான கதாபாத்திரங்களின் நாடகத் தன்மையை கதைகளாக காட்சி படுத்துகிறது. Kengo Takimoto & Masaharu Take ஆகிய இயக்குநர்கள் இணைந்து இயக்கிய இந்தத் தொடரில், Ryoma, Takeuch, Kento, Kaku, Munetaka, Aoki, Toshiaki , Karasawa ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜப்பான் மொழியில் உருவான ஒரிஜினல் கிரைம் ஆக்சன் தொடரான இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
கடைசி உலகப் போர்: அக்டோபர் 24
டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சர்வதேச சக்திகளின் வர்த்தக முற்றுகை காரணமாக இந்தியாவில் அரசியல் மோதல்கள் எழுகின்றன. இதன் விளைவாக உள்நாட்டு அமைதியின்மை ஏற்படுகிறது.
ஸ்வாக்: அக்டோபர் 25
போலீஸ் அதிகாரி பவபூதி தனது மனைவிக்கு குழந்தைகளை பெறுவதை தடுத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார். மன சோர்வடைந்த அவர்.. ஒரு பரம்பரையை பற்றி அறிந்து கொள்கிறார். அவர் அந்த பரம்பரைக்கான உரிமையைக் கோர செல்கிறார். ஆனால் அங்கு வாரிசு என கூறப்படும் பிற வாரிசுகளையும் காண்கிறார்.
லைக் எ டிராகன் : யாகுசா அக்டோபர் 25
1995 மற்றும் 2005இல் காலகட்டத்தின் பின்னணியில் இவை உருவாக்கப்பட்டிருக்கிறது. யாகுசா போர் வீரனின் வாழ்க்கை, அவரது குழந்தை பருவ உறவுகள் மற்றும் அவரது சமரசமற்ற நீதி, கடமையின் விளைவுகள்.. ஆகியவற்றை விவரிக்கிறது.
ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.
திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!
Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!
முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் சிலிர்க்க வைக்கும் தொடராக உருவாகியுள்ளது. நவீன் சந்திரா மற்றும் நந்தா தலைமையிலான ஒரு நட்சத்திர நடிகர்கள் குழு இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் புதிய ஆற்றல் மற்றும் துணிச்சலான நடிப்பு திறமை கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் இளம் நடிகர்கள் குழுவும் உள்ளது. அவர்களின் அழுத்தமான நடிப்பு கதைக்கு உயிரூட்டியுள்ளது.
முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் இந்த சீரிஸ் பற்றி கூறியதாவது…,
ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் தனித்துவமான கதைக்களம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு அற்புதமான சீரிஸ். மிக அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் இந்த சீரிஸ்
ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்து பதுங்கியிருக்கும் மிக வித்தியாசமான கதையுடன் உருவாகியிருக்கும், இந்த தமிழ் டார்க் ஹ்யூமர் த்ரில்லர் தொடர், கிளாசிக் கேமை தழுவி உருவாகியுள்ளது. இந்த தொடரில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசிய கார்த்திக் சுப்பராஜ், இளம் குழுவின் முழு அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தை வெகுவாக பாராட்டினார், "கேமராக்கள் ரோல் ஆவதற்கு முன்பே குழந்தைகள் தங்கள் பாத்திரங்களாக தயாராகி இருந்தனர், இந்த தொடரில் தங்கள் பாத்திரங்களைப் பற்றி மிகத் தெளிவுடன் தெரிந்து கொண்டு, ஆர்வமாக அர்ப்பணிப்புடன் நடித்தனர். இந்த சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு, ஒரு புதிய ஆற்றலையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்தனர், இதனால் கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருக்கும்.
எ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன் பேனரின் கீழ் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் சீரிஸை, கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் உருவாக்கத்தில், அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில் நவீன் சந்திராவுடன் நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரிந்தா, ஸ்ரீஜித் ரவி, எம்.எஸ். சம்ரித், எஸ். சூர்யா ராகவேஷ்வர், எஸ். சூர்யகுமார், தருண் யுவராஜ் மற்றும் சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 18 முதல், இந்த சீரிஸ், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட உள்ளது, தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு, இந்தியாவெங்கும் உள்ள பார்வையாளர்கள் அணுகும் வகையில் திரையிடப்படுகிறது.
#BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது
'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் - எம். தேஜஸ்வினி நந்தமூரி - கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் படத்திற்கு 'அகண்டா 2- தாண்டவம் ' என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.
படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.
அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார். மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம், எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம் படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது.
நந்தமூரி பால கிருஷ்ணாவை மாஸாக திரையில் காட்சிப்படுத்துவதில் பொயபட்டி ஸ்ரீனு தனித்துவமான திறமை மிக்கவர். அதிலும் நந்தமூரி பாலகிருஷ்ணாவை மாஸ் மகாராஜாவாக காட்சிப்படுத்தும் வகையில், ஐன் சக்தி வாய்ந்த திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டி டெடகே ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும், தம்மி ராஜு பட தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். 'அகண்டா' படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த எஸ். தமன் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும், ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் இந்த பரபரப்பான கூட்டணியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகண்டா 2 க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், மேலும் இந்த அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா