சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!
Updated on : 23 January 2026

தென் இந்திய சினிமாவில் தனது மென்மையான மெலடிகள், உணர்வுப் பூர்வமான பின்னணி இசை மூலம் தனி அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்துள்ளார். இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குநர்-தயாரிப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தென் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



 



ரவி உத்யாவர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் உடன் இணைந்து, ஒரு முக்கிய பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். அந்த பாடலை ஜூபின் நௌடியல் மற்றும் நீதி மோகன் பாட, பாடல் வரிகளை அபிருச்சி எழுதியுள்ளார். மெலடியும் உணர்ச்சியும் கலந்த இந்த பாடல், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



 



மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கிய ஹேஷம், குறிப்பாக தெலுங்கில் “குஷி”, “ஹாய் நானா” போன்ற ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். சமீபத்தில் வெளியான “கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படத்தின் இசை, அவரது பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழில் “ஒன்ஸ் மோர்”, சூரி நடித்த “மாமன்” ஆகிய படங்கள் மூலம் ஹேஷம் பெற்ற பாராட்டுகள் குறிப்பிடத்தக்கவை.



 



தற்போது, ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் இயக்கும் பெரிய படம், ஹாய் நானா இயக்குநர் ஷௌர்யுவ் உடன் புதிய கூட்டணி, மேலும் “ஹிட்” பட இயக்குநர் சைலேஷ் கோலனு உடன் ஒரு திரைப்படம் என அவரது கைவசம் பல முக்கியப் படங்கள் உள்ளன. தமிழில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் அவரது அடுத்த வெளியீடாக தயாராகி வருகிறது.



 



இதோடு மட்டுமல்லாமல், Netflix தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படமான “மேட் இன் கொரியா” (Made in Korea)-க்கும் ஹேஷம் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் இந்த படம், இந்தியா – தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.



 



கன்னடத்தில் Golden Star கணேஷ் நடித்துவரும் படத்தின் மூலம் ஹேஷம் அந்த திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் விரைவில் வெளியாகவுள்ள “மதுவிது” திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.



 



ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் திரைப்படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்”, Zee Studios, Rankcorp Media, Bhansali Productions, Ravi Udyawar Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா