சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் 'வள்ளி மயில்'
Updated on : 13 June 2023

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,பழநி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. 



 



சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். 



 



1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா த்ரில்லராக  வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. 



 



தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. 



 



இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில்,தம்பிராமையா,GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



 



இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு -  வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர் - ஆண்டனி, கலை இயக்கம்  - உதயகுமார், ஸ்டண்ட் - மாஸ்டர் ராஜசேகர்,  மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM ) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.



 



படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா