சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!
Updated on : 05 July 2023

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 



 



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல்  கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.



 



இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 118 நாட்கள் நடைபெற்று முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கென பிரத்யேக புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் பா. ரஞ்சித்... கதையின் நாயகன் சீயான் விக்ரம்... நாயகி மாளவிகா மோகனன்.. ஆகிய மூவரும் வித்தியாசமான ஒப்பனையில் வண்ண கண்ணாடி அணிந்து தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 



 



தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரிதும் எதிர்பார்க்கும் படைப்பாக 'தங்கலான்' இடம் பிடித்திருக்கிறது. கதைக்களம்- கதை சம்பவம் நடைபெறும் காலகட்டம்- பிரபலமான நட்சத்திர நடிகர்கள்- திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள்- அனுபவமிக்க தயாரிப்பாளர்.. ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் சீயான் விக்ரமின் 'தங்கலான்' திரைப்படம், உலகளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா