சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

9 வயதுக் குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப்!
Updated on : 05 July 2023

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப். 



 



இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், ஒரு இந்திய நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பன்முகம் கொண்டவர், இவர்  கன்னட படங்களில் முதன்மை பிரபலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கிச்சா சுதீப்  கன்னட சினிமாவில்  அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவராவார். நான்கு  தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 



 



மூன்றாம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்‌ஷி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகர்.  அவரிடம்  ஏன் சுதீப்பை சந்திக்க ஆசை என்று கேட்ட போது… "அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்,  என்றவர்". கன்னடப் படமான 'ராணா' படத்தில்  வரும் திதிலி பாடல் என்னை எப்போதும் உற்சாகப்படும். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென்பது எனது கனவு என்றார்.  இவரது தாய் சுரேகா ராணி. தந்தை மஹிந்தர், தச்சராக பணியாற்றுகிறார். 



 



ஏழ்மையான இந்த சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், குழந்தையை நேரில் சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். 



 



தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்‌ஷி உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா