சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை!
Updated on : 07 July 2023

இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர்  மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 



 



SRK படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில்  தான் விற்கப்படுகின்றன, அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் சாதனையைத் தகர்த்து வருகிறது.  அவரது வரவிருக்கும் இரண்டு படங்களின் வியாபாரத்தில் சொல்லப்படும்  எண்கள் திரை உலகைத் திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது. 



 



SRK இன் அடுத்த வெளியீட்டைச் சுற்றி ரசிகர்களிடம் நிலவும்  எதிர்பார்ப்பு தொழில்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள்  படத்தின் உரிமைகளைப் பெறப் போட்டிப் போட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய எண்கள் சமீப காலங்களில்   எந்த  ஒரு திரைப்படத்தையும் விஞ்சியதாக, பெரும் எண்ணிக்கையில் வியக்க வைக்கிறது, தொடர்ந்து  பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக  வலம் வரும்  SRK இன் புகழ்  அசைக்க முடியாததாக உள்ளது. 



 



ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அட்லீ குமார் இயக்கியுள்ளார். இதை ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌரி கான் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த அற்புதமான படைப்பின் அடுத்த கட்ட அப்டேட்டுக்கு சிறிது காலம் காத்திருங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா