சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

'வி1 மர்டர் கேஸ்' ஹீரோ இயக்குனராக களமிறங்கும் 'ஹர்காரா' ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில்!
Updated on : 02 August 2023

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 



 



தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,  இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு,  ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது. 



 



KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”, இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும். இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். 



 



வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ  இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும்,  அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.



 



இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக  நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி  நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 



 



மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம்,  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா