சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

இந்திய அளவை தாண்டி, ஹாலிவுட் அளவில் இருக்கும் 'விருஷபா'
Updated on : 07 August 2023

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.



 



ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017)  போன்ற பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ். 



 



ஹாலிவுட் பிரபலமான நிக் துர்லோவ் இணைந்திருப்பதால், விருஷபா படத்தின் தரம் இந்திய அளவை தாண்டி, ஹாலிவுட் அளவில் இருக்கும். 



 



படத்தின் தரம்  மற்றும் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக, தயாரிப்பாளர்கள் 57 வினாடிகள் கொண்ட ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர்.  இதில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், பிரமாண்ட செட் அமைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. படத்தின் முழுப் பணிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது .



 



ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றும், இந்த பாணியை இந்தியாவில் பின்பற்றும் முதல் படம் விருஷபா ஆகும்.



 



படம் குறித்து நிக் துர்லோவ்  பகிர்ந்துகொண்டதாவது.., "விருஷபா எனது முதல் இந்தியப் படம், இப்படத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நிர்வாக தயாரிப்பாளராக, திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் நான் கவனம் செலுத்துவேன். எனது நாட்டுக்கு வெளியே, ஒரு பன்மொழித் திரைப்படத்தில், பணிபுரிவது இதுவே முதல் முறை இப்படத்தில் பணிபுரிவது மிகப்பெரும் மகிழ்ச்சி.  ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது, எனக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கிறது அந்த வகையில், விருஷபா படத்தின் அனுபவமும் அசாதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."



 



தயாரிப்பாளர் விஷால் குர்னானி பகிர்ந்துகொண்டதாவது, “நிக் துர்லோவ்  எங்களுடன் இணைந்திருப்பதால், எங்கள் படம் எவ்வளவு  பெரிய பட்ஜெட்டில், எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதை ஒருவர் உணர முடியும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தயாரிக்கப்படும்  முதல் இந்தியப் படங்களில் விருஷபா  ஒன்றாக இருக்கும், ஹாலிவுட் ஆளுமை ஒருவர் எங்கள் விருஷபா குழுவில் இணைந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்"



 



ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதியுடன் மெகாஸ்டார் மோகன்லால் & ரோஷன் மேகா, ஷனாயா கபூர் மற்றும் சஹ்ரா S கான் ஆகியோர்  நடிக்கும் "இந்தியாவின் மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும்,  2024 இன் மிகப்பெரிய படங்களில் இப்படம் ஒன்றாக இருக்கும். 



 



விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்)  (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா