சற்று முன்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |   

சினிமா செய்திகள்

இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் வெளியிட்ட 'கிங் ஆஃப் கொத்தா' டிரெய்லர்!
Updated on : 10 August 2023

Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர். முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய சாம்ராஜ்யத்திற்கு கொண்டு செல்லும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஓணம் பண்டிகை கொண்டாட்டமாகப் ஆகஸ்ட் 24, 2023 அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.



 



'கிங் ஆஃப் கொத்தா'  உலகம் வித்தியாசமானது,  விசுவாசம் ஒரு அபாயகரமான சூதாட்டமாகவும், அரியணைக்கான பந்தயம் இடைவிடாத முயற்சியாகவும் இருக்கும் இந்த உலகில் கோதாவிற்கு ராஜாவாகும் ஒரு கவர்ச்சியான கதையை இப்படம் சொல்கிறது. ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஒரு வல்லமை மிக்க போட்டியாளராக துல்கர் சல்மான் முதன்மை வேடத்தில் பிரகாசிக்கிறார்.



 



புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர், வெகு கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பிரபஞ்சத்தின் ஒரு அற்புதமான கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகளும் இதயத்தை அதிரச்செய்யும் ஆக்சன் காட்சிகளும் ஒன்றிணைந்து புதுமையான அனுபவத்தை உருவாக்குகின்றன. ரகசியங்கள் உடைந்து கூட்டணிகள் நொறுங்கும்போது, துரோகமும் மர்மமும் நிறைந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உலகிற்குள் ஒரு உற்சாகமான பயணத்திற்குப் பார்வையாளர்கள் தயாராகலாம்.



 



நடிகர் துல்கர் சல்மான் படம் குறித்துக் கூறுகையில், "'கிங் ஆஃப் கொத்தா' திரைப்படம் ஒரு அசாதாரண பயணம். அழுத்தமான கதாபாத்திரங்கள்,சிறப்பான கதை மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு என ஒவ்வொன்றிலும் இந்த படம் தனித்து நிற்கிறது. முதலில் Zee Studios மற்றும் Wayfarer Films உடன் இணைந்து பணியாற்றியது உற்சாகமான அனுபவம். என் ரசிகர்களுக்கு இது சரியான ஓணம் விருந்தாகும்."



 



Zee Studios South தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் படம் குறித்துக் கூறுகையில்.., "இந்த ஓணத்தில் 'கிங் ஆஃப் கொத்தா'வை உலகளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் அழுத்தமான கதை, அதற்கேற்ப மிகப்பெரிய பொருட்செலவோடு உருவாகியுள்ளதால்,  ஒரு தரமான படைப்பிற்கு உறுதியளிக்கிறது. படத்தின் உருவாக்கம் பார்வையாளர்களை வசீகரிக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளதால் இது ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும், மேலும் இந்த பிரமாண்ட படத்தைத்  தயாரிக்க Wayfarer Films மிகச்சிறந்த கூட்டணியாக இருந்தார்கள். 



 



ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷபீர் கல்லரக்கல், பிரசன்னா, நைலா உஷா மற்றும் கோகுல் சுரேஷ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில்,  'கிங் ஆஃப் கொத்தா' மெருக்கேறியுள்ளது.



 



Zee Studios மற்றும் Wayfarer Films கூட்டணியில் 'கிங் ஆஃப் கொத்தா' ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ளது , இந்த படைப்பு அற்புதமான பெயர் பெற்ற இரண்டு நிறுவனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் அசைக்க முடியாத அதிகாரத்திற்கான போரை, ஒரு மாறுபட்ட உலகத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது. 



 



தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்திற்கு களம் அமைத்துள்ள நிலையில், இப்படம் ஆகஸ்ட் 24, 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா