சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

வசீகரிக்கும் காதல் நாயகனாக ரொமான்ஸில் கலக்கும் வின்டேஜ் ஷாருக்கானை காண ரசிகர்கள் ஆர்வம்!
Updated on : 13 August 2023

“ஜவான்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு  உட்சம் தொட்டிருக்கும் இந்த இறுதிக்கட்டத்தில், ரொமான்ஸில் பின்னியெடுக்கும் பழைய ஷாருக்கானை  ரசிகர்கள் காணும்  நேரம் வந்துவிட்டது.  ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள "ஜவான்" திரைப்படத்தின் ரொமான்ஸ் பாடலான 'ஹைய்யோடா'  பாடல் டீசரை ஷாருக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.



 



“ஜவான்” படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான  "வந்த எடம்" பாடலின் உற்சாகமான கொண்டாட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் ஒரு மென்மையான காதல் பாடலை பார்வையாளர்களுக்கு வழங்க தயாராகியுள்ளனர். இந்த 'ஹைய்யோடா' பாடல்  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.  



 



சமீபத்தில், #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் ஜவான்  படத்தில் இனிமை மற்றும் மென்மையான ரொமான்ஸ்  பாடலான ஹைய்யோடா பாடல் தான் மிகவும் பிடித்த பாடலென்று குறிப்பிட்டிருந்தார். ஷாருக்கின் வசீகரிக்கும் நடிப்பினில், காதல் நாயகனாக அவரை  மீண்டும் திரையில் காண, ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.



 



ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா