சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

மிகுந்த பொருட்செலவில் மலேசியாவில் தயாராகும் 'லாக் டவுன் நைட்ஸ்'
Updated on : 13 August 2023

ஷாம் நடிப்பில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸில் படமாக்கப் பட்டு வெளியான " காவியன் " படத்தை தயாரித்த  2m சினிமா வினோத் சபரீஷ் தற்போது கிஷோர், பூஜா காந்தி நடிப்பில் உருவாகி வரும் " சம்ஹரிணி " என்ற கன்னட படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.



 



இதை தொடர்ந்து 8 தோட்டாக்கள், ஜிவி போன்ற வெற்றிப்படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " என்ற படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறார்.



 



Netflix ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட " பூச்சாண்டி " படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.



 



இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன், மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் வில்லனாக மிரட்டிய மதியழகன், பூச்சாண்டி படத்தில் வில்லனாக நடித்த லோகன், கோமளா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளனர்.



 



அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.



 



 



விஜய் சேதுபதி நடித்த " பண்ணையாரும் பத்தமினியும் " படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பாடல்கள் - சிநேகன், சாரதி.



அசுரன், விடுதலை, டிரைவர் ஜமுனா போன்ற வெற்றிப் படங்களுக்கு எடிட்டிங் செய்த ராமர். R எடிட்டிங் செய்கிறார்.



 



ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற வெற்றிப் படங்களை

இயக்கிய S.S.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.



 



இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.



 



தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை இசையாமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டணி வெளியிட்டார். அது தற்போது இணைய தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா