சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

உலகளவில் மாபெரும் சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்'
Updated on : 14 September 2023

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெரும் கூட்டத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.



 



இந்தி திரையுலக சந்தையில் ஜவான் திரைப்படம்- வெளியான ஆறாம் நாளன்று 24 கோடி ரூபாயை வசூலித்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளுடன் சேர்த்து திரைப்படத்தின் ஆறாவது நாள் வருவாய் 26.52 கோடி ரூபாய். இந்த வசூல் மூலம் ஜவானின் இந்தி திரையுலக வசூல் மட்டும் 306.58 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் இந்தி மற்றும் பிற மொழிகளில் மொத்த வருவாயை கணக்கில் கொண்டால்.. ஆறாவது நாளில் இத்திரைப்படம் 345 கோடியே 60 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்த சாதனையின் மூலம் ஷாருக்கான் நடித்த படம் இந்தியில் மட்டும் வெளியான ஆறு நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.‌ அதிலும் மிக வேகமாக இந்த வசூலை கடந்த திரைப்படம் என்ற சாதனையும் 'ஜவான்' படைத்திருக்கிறது. 



 



'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா