சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடிகளை குவித்து புதிய சாதனையை படைத்துள்ள 'ஜவான்'
Updated on : 21 September 2023

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அற்புதமான சாதனையை முறியடிக்கும் வகையில் முதல் நாள் வசூலை பதிவு செய்த ஜவான், தற்போது 400 கோடியை மிக வேகமாக கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடிகளை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் உள்ளிட்ட வேறு அனைத்து மொழிகளையும் சேர்த்து கணக்கிட்டால், 'ஜவான்' திரைப்படம் 479.99 கோடி ரூபாயை நிகர வசூலாக பெற்றுள்ளது.‌ தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இந்த திரைப்படம் 49.55 கோடி ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது.  இந்தியில் வெளியாகி வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று.. இந்த அளவிற்கு வசூல் செய்தது அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை கடந்து சாதனையை படைத்து வருகிறது. ஷாருக்கானின் 'ஜவான்' பாக்ஸ் ஆபீசில் அதன் வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. இது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டாவது வார இறுதியில் கூட பாக்ஸ் ஆபிஸில் வலுவாக வசூல் செய்து வருகிறது. இரண்டாவது வார இறுதியில் இந்தியில் மட்டும் 82 கோடியே 46 லட்சத்தை வசூலித்திருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் இரண்டாவது வார இறுதியில் மொத்தம் 88 கோடியே 66 லட்சத்தை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. 'ஜவான்' திரைப்படம் இந்தி திரையுலக சந்தையில் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், சர்வதேச திரையுலக சந்தைகளிலும் அலைகளை உருவாக்கியுள்ளது என்பது இந்த சாதனையை மேலும் வலிமையானதாக ஆக்குகிறது.‌ 'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியானது.‌

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா