சற்று முன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |   

சினிமா செய்திகள்

லண்டனில் உள்ள திருமணமான தம்பதியைச் சுற்றி நடக்கும் மர்ம கதை ‘சில நொடிகளில்’
Updated on : 03 October 2023

ஜீன்ஸ்', 'மின்னலே' போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தந்த இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் 'சில நொடிகளில்' படத்தை வெளியிடுகிறது. ‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து ஆர்யா போன்ற திறமையான நடிகர்களை அறிமுகம் செய்த மலேசியாவை சேர்ந்த புன்னகை பூ கீதா, ‘சில நொடிகளில்’ படத்தைத் தயாரித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



 



ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். லண்டனில் உள்ள திருமணமான தம்பதியைச் சுற்றி  நடக்கும் மர்ம கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. மத்திய லண்டனில் இருந்து 2 மணி நேரம் தொலைவில் உள்ள Chelmsford என்ற சிறிய நகரத்தில் முழு படமும் படமாக்கப்பட்டுள்ளது.



 



இயக்குநர் வினய் பரத்வாஜ் ஊடக உலகிலும் திரைப்படத் துறையிலும் தேர்ந்த அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். பின்பு, கலர்ஸ் இந்திக்காக 'சலாம் நமஸ்தே சிங்கப்பூர்' மற்றும் ஸ்டார் பிளஸ் மற்றும் ஸ்டார் விஜய்க்காக 'ஸ்டார் டாக் வித் வினய்' போன்ற வெற்றிகரமான சர்வதேச டாக் ஷோக்களை நடத்தினார். பின்பு அவர் தனது சினிமா பயணத்தை 'Mundina Nildana' மற்றும் ஆங்கில வெப் சீரிஸான 'காபி ஷாட்ஸ்' மூலம் தொடங்கினார். இப்போது ஒரு நேர்த்தியான, ஸ்டைலான மற்றும் திருப்பங்களுடன் கூடிய படமாக 'சில நொடிகளில்' என்ற தனது முதல் தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.



 



இந்த படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 5 பாடல்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்கள் - மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி & ரோஹித் மாட் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி செய்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் ஏஎம் ஸ்டுடியோவில் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் கலரில் வண்ணமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா