சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் 'மார்க் ஆண்டனி' குறித்த சிபிஐ விசாரணை நிறைவு
Updated on : 20 October 2023

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு சென்சார் சான்றிதழ் பெற மும்பையில் உள்ள சென்சார் போர்ட் அலுவலகத்தை அனுகியது ஆனால் படக்குழு எதிர்பார்த்தது போல் அவ்வளவு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்க அங்கு வழி வகை இல்லாத சூழ்நிலையே நிலவியது.



 



அதுமட்டுமின்றி சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டு மெர்லின் மேனகா என்பவர் மூலம் படக்குழுவை சென்சார் போர்ட் நிர்வாகிகள்  அனுகியுள்ளனர், இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று அலோசனை செய்தபோது இனி தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவிற்கு இப்படி நிகழக்கூடாது என்றும் அதற்கு தக்க ஆதாரத்துடன் இந்த கும்பல் பற்றிய தகவல்களை பொதுவெளியில் தெரியபடுத்த வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மூலம் இடைத்தரகர் மெர்லின் மேனகாவிடம் தொலைப்பேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பணத்தையும் அவர்கள் குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அனுப்பி ஆதாரங்களை சேகரித்த பின் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலமாக பகிரங்கப்படுத்தியது இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



 



 இதனைத்தொடர்ந்து மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களும் இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார், அதனைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை பதிவு செய்து விசாரிக்க நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு மும்பைக்கு நேரில் வந்து புகார் கொடுத்து விளக்கம் தரும் படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக ஹரி கிருஷ்ணன் முன்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்த பின் விளக்கமும் அளித்துள்ளார் இதனிடையே இடைத்தரகர் மேனகா மற்றும் இரண்டு மும்பை சென்சார் போர்ட் அதிகாரிகளையும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட சிபிஐ அவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது,விசாரணை நிறைவு செய்த ஹரி கிருஷ்ணன் நாளை சென்னை திரும்ப உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா