சற்று முன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |   

சினிமா செய்திகள்

இறுதியாக 'நானி 31' படத்திற்கு பெயரை தேர்வு செய்தது படக்குழு!
Updated on : 23 October 2023

'தசரா' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் புகழடைந்து, 'ஹாய் நான்னா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி அடுத்ததாக 'அந்தே சுந்தரனிகி' போன்ற கல்ட் பொழுதுபோக்கு படைப்பை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் இணைகிறார். ஆஸ்கார் விருதை வென்ற 'ஆர் ஆர் ஆர்' எனும் திரைப்படத்திற்கு பிறகு, ''சூர்யாவின் சனிக்கிழமை'' படத்தை  டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.



 



அண்மையில் ஒரு சிறிய வீடியோ உடன் இந்த படைப்பு குறித்து அறிவித்த தயாரிப்பாளர்கள், கட்டவிழ்க்கப்பட்ட- Unchained எனும் மற்றொரு புதிரான வீடியோ மூலம் இதன் தலைப்பை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் கட்டுப்படுத்த முடியாத கதாநாயகனின் அரிய மற்றும் தனித்துவமான தரத்தை விவரிக்கும் சாய் குமாரின் பின்னணி குரலில் அதிரடி நிரம்பிய அன்செயின்ட்- Unchained தொடங்குகிறது. சனிக்கிழமை அந்த விசேட நாள். இறுதியாக 'சூர்யாவின் சனிக்கிழமை' என  தலைப்பு வெளியிடப்படுகிறது. இந்த டைட்டில் அசாதாரணமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. 



 



முற்றிலும் தனித்துவமான கருத்துக்களை முயற்சிக்கும் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிடமிருந்து இது நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதில்லை. மேலும் இந்த திரைப்படம் நானி முன் எப்போதும் இல்லாத ஒரு புதிய அவதாரத்தில் காண்பிக்கும் என்று இந்த அன்செயின்ட் - Unchained வீடியோ உறுதியளிக்கிறது. உண்மையில் நானிக்கு இங்கு ஒரு வீரம் மிகுந்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெற்றி பெற்று வெளியே வரும்போது மக்களின் முகத்தில் புன்னகை இருக்கும். இறுதி அத்தியாயம் கதாபாத்திரத்திற்கு போதுமான உயர்வை கொண்டு வருகிறது. 



 



வித்தியாசமான சப்ஜெக்டுகளில் முயற்சி செய்து கதாபாத்திரங்களின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகர் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். இவை அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. டைட்டிலுக்கான பிரத்யேக வீடியோவில் நானியின் தோற்றம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, தயாரிப்பு தரம் ...என அனைத்தும் அசாதாரணமானதாக இருக்கிறது.‌



 



'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கார்த்திக் ஸ்ரீநிவாஸ் கவனிக்கிறார்.



 



'சூர்யாவின் சனிக்கிழமை' பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.



 



இப்படத்தில் பணியாற்றும் இணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இந்தத் திரைப்படம் நாளை தொடங்க உள்ளது.‌

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா