சற்று முன்

சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்   |    குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி'   |    நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் 'ஜோஷ்வா இமை போல் காக்க'   |    ”போர் தலைப்பிற்கு காரணம் பொன்னியின் செல்வன் தான்” – பிஜோய் நம்பியார்   |    நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நடிகை ஜான்வி கபூர்!   |    விஜய்குமார் ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'எலக்சன்'   |    சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும் - இயக்குநர் ரோஹந்த்   |    மகள் பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புரொடக்ஷன் ஸ்டுடியோ!   |    விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்ட படம்   |    அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG!   |    மீண்டும் வெளியாகும் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்!   |    சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரேவை இன்ஸ்பிரேஷனாக கூறும் புது கதாநாயகி!   |    அனைவருக்கும் தெரிய வேண்டுமென 40 கோடியில் இப்படத்தை எடுத்துள்ளார் - நடிகர் பாபி சிம்ஹா   |    IPLக்கு பிறகு CCL தான் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.   |    ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்   |    அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆர் வி உதயகுமார்   |    அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!   |    கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!   |    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன்   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் மூவி
Updated on : 03 November 2023

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது. 



 



இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 



 



டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 



 



ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். 



 



இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா