சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் - சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர்.
இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின்
நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.
இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சிறந்த நாளில் நம் வேல்ஸ் குடும்பத்திற்கு நாம் பெறக்கூடிய மிக அழகான ஆசீர்வாதம். இந்த வரவேற்பு என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அன்பு செலுத்துவது மட்டுமே உலகின் சிறந்த செயல் என்பதை எனக்கு நினைவூட்டியது, ”என்று டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறினார்.
கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!
சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை".
ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைவிழாவிற்கும் படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைவிழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது.
இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் அனுப்பப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களிலிருந்து ஒரு தமிழ்த்திரைப்படமாக மாண்புமிகு பறை திரைப்படம் இடம் பெற்றது தமிழ் திரைத்துறைக்கே பெரும் பெருமை சேர்க்கும் இந்நிகழ்வு, படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்று தான் ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையை சொல்லும் படைப்பாக மாண்புமிகு பறை திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார்.
இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார்.
இப்படம் கேன்ஸ் திரைவிழாவில் பங்கு பெற்றதைத் தொடர்ந்து திரைஆர்வலர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'
மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.
ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர்.
திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:
உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.
அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.
இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.
இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!
சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் 'மிஷன்' திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த 'மோகினி' திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், 'பிளாக் ரோஸ்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரித்விராஜ் (பப்லு), சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆகும்.
இது வரை யாரும் மேற்கொள்ளாத புதுமையான முயற்சியாக, இத்திரைப்படத்திற்காக மிக அதிக பொருட்செலவில் பைலட் மூவி ஒன்றை சரண் உருவாக்கி இருக்கிறார். கதையின் கருவையும், மாந்தர்களையும், அவர்கள் குணாதிசியங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் இது உருவாகி உள்ளது.
மிக பிரம்மாண்டமாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 'பிளாக் ரோஸ்' படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியிடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, 'பிளாக் ரோஸ்' திரையரங்குகளில் விரைவில் வெளியாகும். பைலட் மூவியை ஏற்கனவே பார்த்த திரையிலகினரும் இதர பிரமுகர்களும் இயக்குநர் சரணை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் குறித்து பேசிய சரண், "முதல் காட்சி முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் வகையில் பரப்பரப்பான திரில்லராக 'பிளாக் ரோஸ்' இருக்கும். ஒரு மர்ம நாவலின் சில முக்கிய பக்கங்களை மட்டும் படிப்பது போல் உருவாக்கப் பட்டுள்ள பைலட் மூவி படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக 'பிளாக் ரோஸ்' இருக்கும்," என்று கூறினார்.
விஜயலட்சுமி மற்றும் கிளவுட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'பிளாக் ரோஸ்' திரைப்படத்திற்கு விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய, 'ஜோ' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சித்து குமார் இசை அமைத்துள்ளார். தமிழ் குமரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கூர்மையான வசனங்களால் மதன் கார்க்கி மெருகேற்றி இருக்கிறார். ஸ்டெஃபானி ஹட்சன் மற்றும் SJ சரண் 'பிளாக் ரோஸ்' படத்திற்கு திரைக்கதையை எழுதி உள்ளனர். சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.
பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!
டென் ஹவர்ஸில், ஓடும் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, கொலை மற்றும் விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஒரு இரவுக்குள் நடக்கின்றன.
டென்ட்கோட்டா கடந்த சில வாரங்களாக, பார்வையாளர்களுக்கு ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா மற்றும் தருணம் உள்ளிட்ட பல்வேறு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த படைப்புகளை கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு படமும் புதிய கதைசொல்லும்பாணி , துணிச்சலான கதைக்களம் மற்றும் தமிழ் சினிமாவின் தனித்துவமான மாற்றங்களை உள்ளடக்கிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார்கள்.
மேலும் குறைந்த பட்ஜெட்டில் வரும் எளிய தொகையை கட்டணமாக கொண்டிருக்கும் டென்ட்கொட்டாவின் சேவை 4k மற்றும் Dolby Atmos தரத்தில் தங்களது சேவையை கொண்டுள்ளது சிறப்பு.
டெண்ட்கோட்டாவில் இந்த வாரம் டென் ஹவர்ஸை ஸ்ட்ரீம் செய்யுங்கள்.
'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ''ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம்.
இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்," என்றார்.
நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ''சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ' டிக்கிலோனா' திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 'வடக்குப்பட்டி ராமசாமி 'படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது. சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.
இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,'' என்றார்.
நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ''இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார்.
இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை கஸ்தூரி பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன்.
நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள். இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம்.
உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,'' என்றார்.
இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ''என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார்.
'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.
இந்தப் படத்தின் ஐடியாவை 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.
ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர்.
'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும்.
இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும்.
இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க...! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,'' என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில், ''இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.
ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.
இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் சந்தானம் பேசுகையில், ''தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார். 'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் 'மன்மதன்' படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. "நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது" என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன். அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா. ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார். அவரை நான் 'கிளாரிட்டி 'கிஷோர் என்று தான் அழைப்பேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்யா என் உயிர் நண்பர். 'கல்லூரியின் கதை' படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. 'சேட்டை' படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். 'லிங்கா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக
அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை
'ஒரு அடார் லவ்' படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக சொல்லி இருப்பவர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார்.
இந்தப் படத்தில் இன்னொரு மைல்கல் நடிகை சிம்ரனின் 'சுல்தானா...' பாடலை ரீகிரியேட் செய்து பிரியா நடனமாடியது. சிம்ரன் நடனத்துடன் ஒப்பிடும்போது தன்னுடைய நடனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என அர்ஜூன் தாஸிடம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்.
மேலும் பிரியா பகிர்ந்து கொண்டதாவது, "அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணி ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!
பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.
‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்.
இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா
நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மாமன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், '' மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, 'இப்படம் ஹிட்' என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார்.
'விலங்கு' என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ' இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ' என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.
இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.
எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
சூரியும், நானும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா 'படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன்.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
சிறுத்தை சிவா பேசுகையில், '' சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சூரி சார் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்'' என்றார்.
நடிகை சுவாசிகா பேசுகையில், '' படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர்.
இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும் ,கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.
படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ' லப்பர் பந்து 'படத்திற்குப் பிறகு ' மாமன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், '' சில பேர் வெற்றி பெறுவார்கள் . தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் ஒரு பிம்பத்தையும் கட்டமைப்பார்கள். வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம் .ரசிப்போம். ஆனால் சூரி சார் உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன். அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கருதுகிறேன். இதற்கு நான் சிறு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்தோம். அதில் இந்த சின்ன பையனுக்கு இவர்தான் மாமன் என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
விலங்கு வெப் சீரிஸை பார்த்துவிட்டு தமிழில் வெளியாகி இருக்கும் சிறப்பான இணைய தொடர் மட்டுமல்ல பெஸ்ட் கன்டென்ட். அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். மிகவும் குறுகிய காலத்திற்குள் பாடல்களை அவர் உருவாக்கினார். அனைத்தையும் பொறுப்புடன் பணியாற்றினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மிகவும் மதிக்கும் பல திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். திங்க் மியூசிக் சந்தோஷின் வார்த்தைகள் இந்த படக்குழுவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. '' என்றார்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், '' என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் 'மாமன்'. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.
பொதுவாக ஒரு கதையை முழுவதுமாக கேட்ட பிறகு அதனை என் மனைவியிடம் சொல்லி, விவாதித்து, அடுத்த நாள் காலையில் தான் இசையமைப்ப ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பேன்.
படத்தின் இரண்டாம் பாதியை கேட்டுவிட்டு உடனடியாக இயக்குநரிடம் இப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவரிடம் நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்றேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், '' மாமன் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவை அளவு கடந்து நேசிக்கும் கலைஞர்களைத்தான் இங்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக பலரும் இங்கு சொன்னார்கள். இதற்கு காரணமாக இருந்த எடிட்டர் கணேஷ் சிவா அவர்களுக்கும், இசையமைப்பாளர் ஹேஷாமிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் ட்ரெய்லர் மே முதல் தேதி அன்று வெளியானது. இந்த திரைப்படம் 16ஆம் தேதி தானே வெளியாகிறது. அதற்குள் படத்தைப் பற்றிய விசயங்கள் தெரிந்து விடுமோ..! என கவலை அடைந்தேன். ஆனால் இதை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ரெண்டு நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டும் அதனை சரியாக சொல்லியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் ராஜ்கிரண் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமிதமாக நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும் ,அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார். இந்த விழாவை சிறப்பிக்க வருகை தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. '' என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில், '' என்னுடைய சகோதரர் சூரி அவர்களுக்கு வணக்கம். இந்த திரைப்படத்தில் அவர் அழகாக இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீம ராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்த போது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
தாய்மாமன் உறவு என்பது சாதாரணமானதல்ல. அப்பா அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பதுதான் தாய் மாமன். ஒவ
இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!
Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான "ஐ அம் கேம்" படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப் படக்குழுவினர் கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
“RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.
தமிழின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஆணட்னி வர்கீஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும் பிளாக்பஸ்டர் “RDX” படத்தைத் தந்த நஹாஸ் ஹிதாயத் இயக்குவது இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது. தனித்துவமான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஐ ஆம் கேம்' படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா