சற்று முன்

சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்   |    குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி'   |    நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் 'ஜோஷ்வா இமை போல் காக்க'   |    ”போர் தலைப்பிற்கு காரணம் பொன்னியின் செல்வன் தான்” – பிஜோய் நம்பியார்   |    நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நடிகை ஜான்வி கபூர்!   |    விஜய்குமார் ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'எலக்சன்'   |    சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும் - இயக்குநர் ரோஹந்த்   |    மகள் பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள புரொடக்ஷன் ஸ்டுடியோ!   |    விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்ட படம்   |    அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG!   |    மீண்டும் வெளியாகும் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்!   |    சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரேவை இன்ஸ்பிரேஷனாக கூறும் புது கதாநாயகி!   |    அனைவருக்கும் தெரிய வேண்டுமென 40 கோடியில் இப்படத்தை எடுத்துள்ளார் - நடிகர் பாபி சிம்ஹா   |    IPLக்கு பிறகு CCL தான் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.   |    ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திப்பாடல் 'கருப்பன் எங்க குலசாமி' - அமைச்சர் பாராட்டி வெளியிட்டார்   |    அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆர் வி உதயகுமார்   |    அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!   |    கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!   |    நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன்   |   

சினிமா செய்திகள்

இதுவரை இல்லாத தோற்றத்தில் நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Updated on : 22 November 2023

அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி - சந்து மொண்டேட்டி - பன்னி வாசு -  கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் 'தண்டேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.  'யுவ சாம்ராட்' நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரான நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். அதே தருணத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி, 'கார்த்திகேயா 2' படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக இருக்கும்.  நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'தண்டேல்' எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்... கவர்ச்சியானவர்... லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்... ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.  நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார்.‌ இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார்.‌ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான 'லவ் ஸ்டோரி'க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. 'தண்டேல்' என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை.  இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.  படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா