சற்று முன்

பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |    படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்   |    புத்தாண்டு தினத்தில் வெளியாகயிருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர்!   |    8 எப்பிசோட்களாக உருவாகும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct'   |    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ரெட்ரோ' பட சூர்யாவின் தோற்றம்!   |    சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |   

சினிமா செய்திகள்

மோகன்லாலின் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் முதல் பார்வை வெளியானது
Updated on : 08 December 2023

பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது.



 



திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது.



 



ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து  இப்படத்தை தயாரித்துள்ளனர்.



 



நடிகர் மோகன்லால் கூறுகையில், "படைப்பாளி லிஜோ ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்." என்றார். 



 



'மலைக்கோட்டை வாலிபன்' யூட்லீ நிறுவனம் மோகன்லாலுடன் இணைந்து தரும்  முதல் திரைப்படமாகும். “லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஒரு புதுமையான உலகை படைத்ததோடு மட்டுமல்லாமல், மோகன்லால்  உடன்  அற்புத நடிகர்கள் கூட்டணியையும் இப்படத்தில் இணைத்துள்ளார்.  மலையாள திரை உலகில் இப்படம் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இதன் தீம், பிரம்மாண்டம் மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி என அனைத்தும் உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளன. இதனால்தான் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்" என்கிறார் சரேகாமா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் – பிலிம்ஸ் & ஈவென்ட்ஸ் சித்தார்த் ஆனந்த் குமார்.



 



‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு வசனம் எழுதியவர், இதற்கு முன்பு லிஜோவுடன் ‘நாயகன்’, ‘ஆமென்’ படங்களில் பணியாற்றிய P S  ரஃபீக் ஆவார். "என்னைப் பொறுத்தவரை, ஒரு கருப்பொருளை திரைப்படமாக உருவாக்கும் செயல்முறையாக நடந்தது,  ஒரு பெரிய வெற்றியை ப்ளாக்பஸ்டரை  உருவாக்கவேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து இது உருவாகவில்லை, இது இயல்பாக நடந்த திரைப்படம். 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் அடிப்படை கரு, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் முளைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவான கதைக்களமாக உருமாற்றம் பெற்றது. எழுத்தாளர் ரஃபீக்  அந்த உலகத்தை என்னுடன் இணைந்து விரிவுபடுத்தினார், அதன் பிறகுதான் அந்த பாத்திரத்திற்கு லாலேட்டன் (மோகன்லால்) சரியான பொருத்தமாக இருப்பார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.



 



“மோகன்லாலுடன் நீண்ட நாள் பழகிய நான், திரைப்படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தபோது, இயல்பாகவே அவரை மிகப்பெரியதொரு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். லிஜோ போன்ற திறமையான இயக்குநர் மோகன்லாலுடன் கைகோர்க்கும் போது, மக்கள் கண்டிப்பாக மிகப்பெரும் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ஷிபு பேபி ஜான்.



 



இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மனோஜ் மோசஸ், கதா நந்தி மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர், 'மலைக்கோட்டை வாலிபன்' ஜனவரி 25, 2024 அன்று திரைக்கு வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா