சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த தமிழ் இயக்குனர்!
Updated on : 08 December 2023

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில்  இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.



 



 



தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி.  தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான,  “ஜவான்” மூலம் இந்தியாவையே  திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி.  ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு, தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலிவுட்டில் இடம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராக சாதனை படைத்திருக்கிறார். 



 



 



ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, ‘ஜவான்’ திரைப்படம், இந்தியாவின் அத்தனை முன்னணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தியாவில் முதல்ப்படமாக சாதனை படைத்தது. 



 



 



பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடித்திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் அட்லிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா