சற்று முன்

கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |    ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்த நிருபர்கள்!   |    ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது   |    பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ள துருவா சர்ஜாவின் 'மார்டின்'   |    உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ள 'மனோரதங்கள்'   |    GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'பாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    'கூலி' படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ருதிஹாசன்!   |    100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'   |    டொவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றும் 'ஏஆர்எம்' பட டிரெய்லர்   |    ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’   |    பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வித்தியாசமான த்ரில்லர் கதை 'பிளாக்'   |    'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம்   |    கடுமையாக உழைத்த தங்கலான்' பட குழுவினருக்கு விருந்து கொடுத்து நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்   |    திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய 'போகுமிடம் வெகு தூரமில்லை' படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர் - திண்டுக்கல் I லியோனி!
Updated on : 11 December 2023

KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. 



 



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக,  பண்பலை  நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



 



இவ்விழாவினில்..



திண்டுக்கல் I லியோனி  பேசியதாவது.., 





முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட  ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடிக்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர்.  படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்ககூடிய அருமையான படம். ஆதரவு தாருங்கள். நன்றி. 



 



நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…





முண்டாசுபட்டி உதவி இயக்குநர் பாரி தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒரே செட்டாக இருந்து பணிபுரிந்தவர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்த  படம், திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் இருக்கும்  காமெடி, படம் எடுக்கும் போது இருந்ததை விட, பார்த்த போது இன்னும் சிறப்பாக வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நண்பர் முனீஷ்காந்துடன் நடித்தது மகிழ்ச்சி. வைபவ், பார்வதி ஆகியோருடன் வேலை பார்த்தது சந்தோசம். இயக்குநர் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். 



 



நடிகர் கபீர்சிங் பேசியதாவது…





இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை சொன்ன போதே  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வைபவ்,பார்வதி இருவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இது மிக நல்ல படம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது, நீங்கள் உணர்வீர்கள், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



ஒளிப்பதிவாளர் வினோத் பேசியதாவது..





இந்தப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் அத்தனை நடிகர்களை ஒருங்கிணைத்ததே பெரிய வெற்றி தான். எல்லோரும் தங்கள் படம் போல் வேலைப்பார்த்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் செம்ம காமெடியாக இருக்கும். முனீஷ்காந்த் கலக்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். அவருக்கு  நன்றி.  படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…





இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ ஹீரோயின் அனைவருக்கும் என் நன்றி. KJR Studios தயாரிப்பு நிறுவனம் என் சொந்த நிறுவனம் போல அவர்களின் அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப்படம் நீங்கள் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாக இருக்கும். இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும். இயக்குநருக்கும், என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



கபிலன் வைரமுத்து பேசியதாவது..





நண்பர் பாரி K விஜய்யுடைய நீண்ட நாள் கனவு. பல காலமாக இந்தப்படம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். இப்போது இறுதியாக இப்படம் திரைக்கு வருவது மகிழ்ச்சி. எனக்கு வைபவ் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு காதாநாயகனாக குறிப்பிட்ட எல்லைக்குள் அவர் செய்யும் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் 4 பாடல்கள் எழுதியுள்ளேன். இயக்குநர் பாரியிடம், யாருக்கு படமெடுக்கிறேன் என்கிற தெளிவு இருக்கிறது. அவரின் மனதிற்கு இந்தப்படம் பெரியதாக ஜெயிக்க வேண்டும்.  சென்னை வெள்ளத்தால் நாம் தற்போது மிக சோகமான காலகட்டத்தில் சிக்கியுள்ளோம் அதிலிருந்து நம்மை மீட்டு சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி. 



 



இயக்குநர் பாரி K விஜய் பேசியதாவது..





இந்தக்கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தயாரிப்பாளர் இந்தக்கதை, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். அவர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட இப்படத்திற்காக அதிகம் செலவழித்தார். அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது.  எழுதியதை விட, எடுப்பது கஷ்டம் ஆனால் அதை மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம். வைபவ், பார்வதி இருவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக  நடித்து தந்தார்கள். அதே போல் பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த் தான் மனதில் இருந்தார்.  நன்றாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம் தற்போது திரைக்கு வருகிறது. ஊடக மக்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 



 



நடிகை பார்வதி பேசியதாவது..  





என் ஃபேவரைட் ஜானர் , ஃபேண்டஸி காமெடி தான். எனக்கு அந்த ஜானரில் ஆலம்பனா படத்தின் வாய்ப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனிஷ் காந்த், காளி வெங்கட் ,ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலைபார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்   



 



நடிகர் வைபவ் பேசியதாவது…





இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே,  சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும்  என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா