சற்று முன்

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |   

சினிமா செய்திகள்

பிரபல பாடகர்-இசையமைப்பாளர் தயாரிப்பில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!
Updated on : 17 February 2024

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' திரைப்படம் மூலமாக இயக்குநர் பிரசாத் ராமர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். 'அருணகிரி பெருமாளே' என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தைப் பிரபல பாடகர்-இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.



 



இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் நடந்துள்ளது. செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரனும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவித்து சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், தொழில்நுட்பக் குழுவில் ராதாகிருஷ்ணன் தனபால் (எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை), அமர்நாத் (டிஐ கலரிஸ்ட்), சதீஷ் சேகர் (டைட்டில் சிஜி), isquare மீடியா (ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன்), யாதவ் ஜேபி (டைட்டில் & போஸ்டர் டிசைன்ஸ்), ஜி.சுரேன் (ஒலிக்கலவை) மற்றும் ஜி.சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு).



 



படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து, மார்ச் 2024ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா