சற்று முன்

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |    அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'   |    தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம்   |    சித்த மருத்துவத்தின் சிறப்பை இந்தப் படத்தின் மூலம் உணர்த்திய இயக்குநர் சிவா   |    கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !!   |    சென்னை அடையாறில் 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'   |    'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா   |    'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டது   |    1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையில் விஜய் தேவரகொண்டா!   |    சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்ட 'தண்டேல்' படக்குழுவினர்   |    எஸ் கே ஜீவா இயக்கும் 'குற்றம் கடிதல் 2' படம் விரைவில் தொடங்குகிற‌து!   |    டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ   |    தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புசெழியன் சார் தான்! - நடிகர் சந்தானம்   |    சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன் - இயக்குநர் ஆதம்பாவா   |    யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |   

சினிமா செய்திகள்

தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!
Updated on : 22 April 2024

அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம்.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அதை எனது தாயார் பெயரில் நிறுவியுள்ள வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை மூலம் தொடர உள்ளேன்.  கல்வி என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுவும் மாணவர்கள் அவர்கள் ஆசைப்பட்ட கல்வியை கற்க வேண்டும்.  பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள காரணத்தால் கல்வியை தொடர்ந்து கற்க முடியாத மாணவர்கள் முறையான கல்வியை தொடர்ந்து கற்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் கல்விக்கு தேவையான உதவிகளை எங்கள் குழு வழங்கும். இத்தகைய அறக்கட்டளைகள் ஏற்கனவே நிறைய உள்ள போதும் உதவி தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. அதே சமயம், கல்வி நிறுவனங்களும் எத்தனையோ மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றன. எனவே இந்த அறக்கட்டளை மூலம் எங்களுக்கு நன்கு அறிமுகமான கல்வி நிறுவனங்கள் மூலமும் இதர பல கல்வி நிறுவனங்கள் வாயிலாகவும் தேவை உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் உதவி செய்வோம். எனது பிறந்தநாளான இன்று எங்கள் தாயார் பெயரில் இந்த அறக்கட்டளையை தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறக்கட்டளை மூலம், கல்வி நிறுவனங்களின் வேந்தர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதரவோடு, உங்கள் அனைவரின் ஆசியோடு இந்த புதிய பயணத்தை தொடங்குகிறோம். அறக்கட்டளை தொடர்பான தகவல்களுக்கு திரு. வி. பாலமுருகன் (9841193196) மற்றும் திரு ஆர்.எஸ். சுதாகர் (9551538810) ஆகியோரை அணுகலாம். மின்னஞ்சல்: vaet11educationaltrust@gmail.com   

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா