சற்று முன்

விஜய் ஆண்டனியின் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ், மகிழ்ச்சியில் படக்குழுவினர்!   |    'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜியை ஓட்டிய ரிஷப்ஷெட்டி, ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாட்டம்!   |    சேவியர் பிரிட்டோ, இயக்குநர் விஷ்ணு வர்தன் இணைந்து வழங்கும் அட்வென்ச்சர் காதல் கதை!   |    இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்! - நடிகர் சித்தார்த்   |    39 ஆண்டுகளுக்குப் பிறகு “கல்கி 2898 கி.பி” படத்திற்காக இணைந்த இரண்டு ஜாம்பவான்கள்!   |    இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பங்குபெறும் கல்கி 2898 கிபி க்ரோனிகல்ஸ் நேர்காணல்!   |    மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா!   |    இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!   |    இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்   |    பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் இணைந்து கலக்கும் 'கல்கி 2898 கி.பி' திரைப்பட புதிய பாடல்!   |    இன்றும் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் மோகன்!   |    விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்!   |    சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து உதவி கரம் நீட்டியுள்ள திரைபட கதாநாயகர்கள்!   |    உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'புஷ்பா 2: தி ரூல்'!   |    AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாது தயாரிப்பு நிறுவனம்!   |    ’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |   

சினிமா செய்திகள்

திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!
Updated on : 07 June 2024

மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்பட படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ‘Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக மூவி பஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா.  இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. 



 



படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமா துறையின்  முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தங்கள் எடுத்த படங்களை பெரிய திரையில் பார்க்கவும் இந்த  போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.



 



இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் எஸ்.யு. அருண்குமார், இயக்குனர் ஹலீதா சமீம், எடிட்டர் செல்வா ஆர்.கே., எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எடிட்டர் பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர், திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 



 



வெற்றிபெறும் முதல் 3 போட்டியாளர்கள் டர்மெரிக் மீடியா மற்றும்  மூவி பஃப்பிலிருந்து ரொக்க பரிசுகளை வெல்வார்கள். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 3 லட்சமும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். வெற்றியாளர்களை அவர்களின் ஸ்கிரிப்டை டர்மெரிக் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒரு விநியோக நிறுவனத்திடம் கூறுவதற்கான வாய்ப்பு & அவர்களுடன் பயிச்சி பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். 



 



Big Shorts வழக்கமான பார்வையாளர்களை கவர்வதையும் தாண்டி புதிய வயது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை வழங்க விரும்புகிறது. இந்த அற்புதமான இணைப்பின் மூலம் டர்மெரிக் மீடியா மற்றும் மூவி பஃப் நிறுவனங்கள் கதை சொல்லலின் எல்லைகளை தாண்டி குறும்பட வடிவத்தில் திரைப்பட படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான தளத்தை வழங்கவுள்ளது.  



 



போட்டி விவரங்கள்:



போட்டி மே 22, 2024 அன்று அதிகார பூர்வமாக தொடங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் bigshorts.moviebuff.com இல் பதிவு செய்யலாம். ஜூலை 1, 2024 க்குள் தங்கள் Entry-களை சமர்ப்பிக்கவும். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அடங்கிய புகழ்பெற்ற வல்லுநர்கள் குழு திரைப்படங்களை தேர்வு செய்யும். அவை பொது வாக்களிப்பிற்காக ஆன்லைனில் வெளியிடப்படும்.



 



ஆன்லைன் வாக்களிப்பின் அடிப்படையில், முதல் ஐந்து படங்கள் ஐந்து வாரங்களுக்கு பெரிய திரையில் திரையிடப்படும். கியூப் சினிமா நெட்வர்க்கின் பல திரையரங்கு விநியோக மாவட்டங்களில் 500 திரைகளில் இந்த படங்கள் வெளியிடப்படும். அந்த நேரத்தில் Bigshorts இல் இந்த முதல் ஐந்து படங்கள் பொது மக்களின் வாக்குகள் மூலம் தரவரிசைப்படுத்தப்படும். இதில் அதிக வாக்குகளை பெரும் படம் வெற்றி படமாக அறிவிக்கப்படும். 2024-ம் ஆண்டில் மத்தியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார். மேலும் தகவலுக்கு bigshorts.moviebuff.com ஐப் பார்வையிடவும். 



 



டர்மெரிக் மீடியா பற்றி:



டர்மெரிக் மீடியா என்பது ஆர். மஹேந்திரனின் தொலைநோக்கு பார்வையாகும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஏறக்குறைய 25 வருட அனுபவத்துடன், திரைப்பட துறையில் வளர்ந்து வரும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 



 



மூவி பஃப் பற்றி:



Qube-இன் ஓர் அங்கமான மூவி பஃப், திரைப்படங்களின் வணிகம் தொடர்பான அனைத்து தகவல் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஒரு எண்ட்-டு-எண்ட் சேவையாகும்.



 



தொடர்புக்கு: content@moviebuff.com

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா