சற்று முன்

பிரைம் டே -2024ஐ முன்னிட்டு பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது!   |    'ககனச்சாரி' படத்திற்கு திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ் கோபி!   |    லைக்கா நிறுவனம் 'இந்தியன் 2' படத்திற்காக நடுவானில் செய்த விளம்பரம்!   |    Youtube அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தை பிடித்த கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்கள்   |    பிரபுதேவா நடிக்கும் 'சிங்காநல்லூர் சிக்னல்' இனிதே துவங்கியது !   |    வால்வரின் வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்தபட்ட டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ   |    ஹம்பியில் பூஜையுடன் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது!   |    விஜய் ஆண்டனியின் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ், மகிழ்ச்சியில் படக்குழுவினர்!   |    'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜியை ஓட்டிய ரிஷப்ஷெட்டி, ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாட்டம்!   |    சேவியர் பிரிட்டோ, இயக்குநர் விஷ்ணு வர்தன் இணைந்து வழங்கும் அட்வென்ச்சர் காதல் கதை!   |    இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்! - நடிகர் சித்தார்த்   |    39 ஆண்டுகளுக்குப் பிறகு “கல்கி 2898 கி.பி” படத்திற்காக இணைந்த இரண்டு ஜாம்பவான்கள்!   |    இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பங்குபெறும் கல்கி 2898 கிபி க்ரோனிகல்ஸ் நேர்காணல்!   |    மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா!   |    இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !!   |    இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்   |    பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் இணைந்து கலக்கும் 'கல்கி 2898 கி.பி' திரைப்பட புதிய பாடல்!   |    இன்றும் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் மோகன்!   |    விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்!   |    சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து உதவி கரம் நீட்டியுள்ள திரைபட கதாநாயகர்கள்!   |   

சினிமா செய்திகள்

லைக்கா நிறுவனம் 'இந்தியன் 2' படத்திற்காக நடுவானில் செய்த விளம்பரம்!
Updated on : 04 July 2024

இந்தியன் இரண்டாம் பாகம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் .



 



மிகப்பெரிய பொருட்செலவில் 1996 இல் கமலஹாசன் வைத்து  இந்தியன் என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஷங்கர் இயக்கியிருக்கும் படம் தான் இந்தியன் 2 . லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் மொழி மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை மூன்று பாடல்கள் படத்திலிருந்து வெளியாகி உள்ளன.



 



இதனிடையே இந்தியன் இரண்டாம் பாகத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை, சிங்கப்பூர், துபாய் என மாறி மாறி படக்குழு படத்திற்கான புரமோசன் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



 



இந்த அளவிற்கு பிரமோஷன் பண்ணுவதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கும் போது, இந்தியன் டு ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன என்றும், இடையில் இந்த படம் நின்றதால் மக்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது என்றும், அந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகவே இந்த ப்ரோமோஷன் என்றும் பல குழுவினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. 



 



அதன்படி, துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் இந்தியன் 2 பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு, அலங்கரித்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளனர். இது தற்சமயம் மிகவும் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா