சற்று முன்

நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |   

சினிமா செய்திகள்

புதுமையான காதல் கதை ஒன்றை எழுதி இயக்கி முதன்மை வேடத்தில் நடிக்கும் மிதுன் சக்கரவர்த்தி!
Updated on : 16 July 2024

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.



 



இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர். இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில பிரபல நட்சத்திரங்களும் இதில் நடிக்க உள்ளனர். 



 



திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாயகனான மிதுன் சக்கரவர்த்தி, "திரை உலகில் இதுவரை சொல்லப்படாத வகையில் மிகவும் புதுமையான காதல் கதையாக இது இருக்கும். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் உணர்ச்சிகளின் கவின்மிகு கலவையாக இந்த திரைப்படம் உருவாகும்," என்று கூறினார். 



 



தொடர்ந்து பேசிய அவர், "இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். படப்பிடிப்பை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார். 



 



வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த திரைப்படத்திற்கு  அமர்கீத் இசையமைக்க வெற்றிவேல் ஒளிப்பதிவை கையாளுகிறார். புவன் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்குநர்: பிரேம்; நடனம்: வரதா மாஸ்டர்; டிசைனர்: கிப்சன் யுகா; மேலாளர்: பெருமாள்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.



 



வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா