சற்று முன்

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |   

சினிமா செய்திகள்

சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது - தயாரிப்பாளர் தனஞ்செயன்
Updated on : 16 July 2024

Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும்,  வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”. 



 



இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. 



 



இந்நிகழ்வினில் 





இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது…



இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன், இந்தக்கதை இந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்றபோது, தியேட்டருக்கு வருபவர்கள், ஒரு புதுமையான அனுபவம் தர வேண்டும் என்றேன். பைலட் எடுத்து காட்டிய போது என்னை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டார். படம் முழுக்க நிறைய பிரம்மாண்டம் இருக்கிறது. கடலுக்குள் நடக்கும் காட்சி இருக்கிறது, கார் சேஸ், ப்ளைட் பைட், ஹிஸ்டாரிகல் காட்சிகள் என நிறைய இருக்கிறது. பாகுபலி அளவெல்லாம் முடியாது ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். கேமராமேன் சரியாக இருந்தால் தான் சிஜி சரியாக வரும், சந்துரு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். என் எதிர்பார்ப்புகளை புரிந்து இசையமைத்த ஆதர்ஷ்க்கு நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இன்னொரு முக்கிய காரணமாக இருந்த அமருக்கு நன்றி. படத்தில் எனக்காக கடும் உழைப்பை தந்த, சூர்யா தாமோதரன் என எல்லோருக்கும் நன்றி. எடிட்டர் கார்த்தி நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்துள்ளார். ஜூவா ரவி சார்  நடிக்கும் போது இது கரக்டாக வருமா என்று கேட்டார், டிரெய்லர் பார்த்த பிறகு, இப்போது நம்புகிறார். தனஞ்செயன் சார் வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ரசிகர்கள் மீதான் நம்பிக்கையில் புதிய அனுபவம் தர வேண்டுமென, இப்படத்தை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.



 



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…



நான் இந்த விழாவிற்கு வர முடியாத அளவு வேலை இருந்தது. அமர் டிரெய்லர் பாருங்கள் முடிந்தால் வாருங்கள்  என்றார். பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும்படியான படைப்பாக இருக்கும்.  அகஸ்டின் பிரபுவின் புது முயற்சி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்களிடம் இந்தப்படத்தை அறிமுகம் செய்துவிட்டு தியேட்டருக்கு கொண்டு வந்தால் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டு, படத்தை கொண்டு வாருங்கள். இப்படம் நல்ல படைப்பாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



 



நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..



ஒரு நல்ல கண்டண்ட் உள்ள படம் இந்த சதுர். படப்பிடிப்பில் ஒரு டப்பாவில் நிற்க சொன்னார் இயக்குனர்,  படத்தில் பார்த்தால் அது கடலுக்குள் லிப்டில் செல்கிறது. டிரெய்லரே மிரட்டலாக இருக்கிறது. புது குழுவினர் மிக அற்புதமாக படத்தை உருவாக்கியுள்ளனர். பல சின்ன படங்களுக்கு வியாபார ரீதியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அகஸ்டின் இந்தப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். கோயம்புத்தூரிலிருந்து லோகேஷுக்கு பிறகு இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படம் உங்களை வியக்க வைக்கும் அனைவருக்கும் நன்றி. 



 



நடிகர் அமர் பேசியதாவது… 



பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. சதுர் படத்தில் நடிகனாக அறிமுகமாவது மிகப்பெரிய பெருமை. ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன், படத்தில் என் பெயர் தமிழ், அதுவும் எனக்கு பெருமை. அகஸ்டின் சொன்ன படி படத்தை ஆரம்பித்தார். டிரெய்லர் படத்தின் கலைஞர்களின் திறமையை சொல்லும். நிறைய திறமையாளர்கள்  இப்படத்தில் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் நன்றி. 



 



நடிகர் அஜித் பேசியதாவது.. 



பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



நடிகர் தாமோதரன் பேசியதாவது…



சதுர் படத்தில் வாய்ப்பு வழங்கிய இயக்குனர் அகஸ்டின் மற்றும் குழுவினருக்கு நன்றி. டிரெய்லர் இப்போது தான் பார்த்தேன். இயக்குனர் காட்டவே இல்லை. உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி.



 





 



நடிகர் சூர்யா பேசியதாவது…



இந்தப்படத்தில் ஒரு மெயின் ரோல் செய்துள்ளேன். இயக்குனர் டிரெய்லரை யாருக்குமே காட்டவில்லை, இங்கு தான் அனைவரும் பார்த்தோம். திருப்தியாக உள்ளது. எங்களுடன் இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், எல்லோருக்கும் நன்றி. 



 



ஒளிப்பதிவாளர் ராம் T சந்தர் பேசியதாவது…



இந்தப்படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இயக்குனர் அகஸ்டின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைய சிஜி ஷாட் பிளான் பண்ணி எடுத்துள்ளோம். இயக்குனர் அகஸ்டின் உயிரைக்கொடுத்து உழைத்துள்ளார். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி, எல்லோருக்கும் நன்றி. 



 



இசையமைப்பாளர் ஆதர்ஷ் பேசியதாவது…



இது என் முதல் படம். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன். அகஸ்டின் அண்ணா தான் நிறைய ஊக்கம் தந்தார். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். புதுமையாக பல விசயங்கள் முயற்சித்துள்ளோம், பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது…



தயாரிப்பாளராக இது என் முதல் மேடை, என் பெற்றோர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அகஸ்டின் விஷன் மிகப்பிரமாண்டமாக இருக்கும். டிரெய்லரை விட படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். 



 



எடிட்டர் கார்த்திக் பேசியதாவது…



இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி. எடிட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய உதவியாக அகஸ்டின் இருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். தியேட்டரில் பார்க்கும் போது இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா