சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்
Updated on : 22 July 2024

அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன்  என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. 



 



D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்களித்திருக்கிறார்.



 



இதனை முன்னிட்டு அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சென்னை காசி டாக்கீஸ் திரையரங்கில் இசையமைப்பாளர் D. IMMAN, இயக்குனர் Prabhu Solomon -வுடன் படம் பார்த்து படத்தில் நடித்த பதிமூன்று குழந்தைகளுடன் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்கள். 



 



நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக குடும்பத்தினருடன் ரசிக்கும் படி படம் எடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படம் கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது என இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்தார். 



 



நல்ல கதையம்சத்தோடு எந்த காலகட்டத்தில் வெளியானாலும் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு TEENZ படம் ஒரு உதாரணம் என நடிகர், இயக்குனர் பார்த்திபன் நெகிழ்ந்தார். படத்தில் பணியாற்றிய பதிமூன்று குழந்தைகளுக்கு அவர்கள் படத்தில் கொடுத்த ஒத்துழைப்புகளுக்காகவும், சிறந்த நடிப்பிற்க்காகவும் Bonus - ஆக அன்பு முத்தங்களை பரிசாக தந்தார். பத்திரிக்கை மற்றும் ஊடக    நண்பர்களுக்கும்,  ரசிகர்களுக்கும் தன்னுடன் இணைந்து பணியாற்றிய யாவருக்கும் பார்த்திபன் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா