சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!
Updated on : 22 July 2024

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி', அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 



 



'மக்காமிஷி' என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம் வரும் என தெரிவித்து ஹாரிஸ் ஜெயராஜ், பால் டப்பா மற்றும் சாண்டி மாஸ்டர் யூகங்களுக்கு எல்லாம் சில தினங்களுக்கு முன் முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில் இப்பாடல் சனிக்கிழமை (ஜூலை 20) அன்று வெளியிடப்பட்டது. 



 



வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுள்ள 'மக்காமிஷி' பாடல் இளைஞர்களால் வைப் (vibe) செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சமூக வலைதளங்களில் எக்கச்சக்க பார்வைகள், இதயங்கள் மற்றும் லைக்குகளை அள்ளி வருகிறது. 



 



'மக்காமிஷி' பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை கண்டு மிகுந்த உற்சாகமடைந்துள்ள படக்குழவினர் 'பிரதர்' திரைப்படத்தின் இதர பாடல்களை அடுத்தடுத்து வெளியிட தயாராகி வருகின்றனர். 'பிரதர்' திரைப்படத்திற்காக ஐந்து பிரமாதமான பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இது இருக்கும் என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 



 



'பிகில்', 'நட்பே துணை', 'தடம்' உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை விநியோகம் செய்து, 'தாராள பிரபு', 'சாணி காயிதம்', 'மத்தகம்', மற்றும் 'அகிலன்' என தயாரிப்பிலும் முத்திரை பதித்து வரும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பிரதர்' படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழும் ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் பெற்றுள்ளன. 



 



ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கு இடையேயான பாசப்பிணைப்பை கலகலப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் குடும்ப திரைப்படமான 'பிரதர்', ஜெயம் ரவியின் முப்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், 'கே ஜி எஃப்', 'புஷ்பா', 'ஜெய் பீம்', புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'பிரதர்' திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா