சற்று முன்
சினிமா செய்திகள்
Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya
Updated on : 23 July 2024
The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.
The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, "caption to be added," further adding to the suspense.
Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.
Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.
'Ghuspaithiya' is set to release in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.
சமீபத்திய செய்திகள்
'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகை தேவதர்ஷினி பேசும்போது,
“96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம் இது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போது, இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என இயக்குநர் பிரேம்குமார் கூறியதும் இரண்டு நாட்களுக்கு எனக்கு பேச்சே வரவில்லை. இந்த படத்தில் இருந்து ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள். 96ல் நமக்கு நடந்த அனுபவம் இதிலும் வேறு விதமாக தொடரும். பொதுவாக யாராவது ஒரு பெண்ணிடம் நீ என்ன ஐஸ்வர்யா ராயா என்றால் அதே போல ஆணிடம் நீ என்ன அர்விந்த்சாமியா என்று கேட்பதுதான் வழக்கம். அந்த அளவிற்கு கல்லூரியில் படிக்கும்போது அர்விந்த்சாமியின் தீவிர ரசிகையாக இருந்தேன். எங்களது கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது அவரை எப்படியாவது பார்த்து விட பல வழிகளில் முயன்றேன். ஆனால் அவரது கால் நகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அவருடனேயே இணைந்து நடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. நான் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடிப்பது குறித்து எனது சில கல்லூரி தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பிய போது சில பேர் கோபத்தில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவரை தமிழ் திரைப்படங்கள் பார்த்த எல்லோருக்குமே கார்த்தி இந்த படத்தில் செய்திருக்கும் கதாபாத்திரம் மிகமிக பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நியாயம் செய்துள்ளார் கார்த்தி” என்றார்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ் பேசும்போது,
“கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அர்விந்த்சாமி சார் எங்களை திருச்சியில் விருந்துக்காக அழைத்துச் சென்றார். அங்கே தான் அவருடைய வேறு ஒரு முகத்தை முதன்முறையாக பார்த்தேன். எங்களை மட்டும் அல்லாமல் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் அக்கறையுடன் விசாரித்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சாதாரண நாள் அன்று சிறப்பு நாளாக மாறிவிட்டது. அப்படி அவர் காட்டிய சின்ன சின்ன அன்பை உண்மையிலேயே மறக்க முடியாது. இந்த படத்தை பார்த்ததும் கார்த்தி சாரை போன்ற ஒருத்தர் நம் கூடவே வாழ்நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணரும்படியாக அவரது கதாபாத்திரம் இருக்கும். அதை நாங்கள் படப்பிடிப்பில் நிஜத்திலேயே உணர்ந்தோம். கார்த்தி, அரவிந்த்சாமி, பிரேம்குமார் இந்த மூன்று பேர் கூட்டணியில் உருவாகும் படத்தில் என்னுடைய பங்கும் ஒன்று இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,
“2டி நிறுவனத்துடன் 36 வயதினிலே படத்தில் முதன்முறையாக இணைந்தோம். அதற்கு அடுத்ததாக இப்போது மெய்யழகனில் இணைந்துள்ளோம். 96 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமாருடனும் இது எங்களுக்கு இரண்டாவது படம். அதேசமயம் கார்த்தி சாருடன் எங்களுக்கு இது ஐந்தாவது படம். இந்த படத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு வாரம் என்னால் வெளியே வரவே முடியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது, என்னுடைய உறவினர்கள் அனைவரும் இருப்பது எல்லாமே சென்னையில் தான். ஆனால் மெய்யழகன் படத்தை பார்த்தபோது தீபாவளி, பொங்கல் நல்ல நாட்களை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகிறவர்களின் உணர்வை என்னால் அழகாக புரிந்து கொள்ள முடிந்தது. மெய்யழகன் படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் சார்ட் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
“சென்னையை இரண்டாவது தாய்மடி என்று சொல்வார்கள். என்னதான் இங்கே எல்லாமே கிடைத்தாலும் நமக்கு சொந்த ஊரில் தான் அதிகம் கிடைத்திருக்கிறது. விசேஷ நாட்களில் இங்கிருந்து நாம் சொந்த ஊருக்கு செல்லும் போது அந்த ஊருக்கும் நமக்குமான பிணைப்பு, அப்பா அம்மாவுக்கும் நமக்குமான பிணைப்பு என இந்த விஷயத்தை மிகச் சரியாக, மிக நுட்பமாக கையாண்ட திரைப்படம் இதுவரைக்கும் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஒன்று நகரத்தை நோக்கிய படமாக இருக்கும். அல்லது கிராமத்தை நோக்கிய படமாக இருக்கும். கிராமத்தையும் நகரத்தையும் பக்காவாக இணைத்துள்ள படம் தான் இது.
ஒரு நகரவாசியாக இந்த மெய்யழகன் படத்தை உங்களால் நூறு சதவீதம் ரசிக்க முடிந்தால் முழுக்க முழுக்க கிராமத்தில் இருக்கும் ஒருவராலும் இந்த படத்தை அழகாக ரசிக்க முடியும். எல்லோரும் வாசித்து மனதில் பதிந்த பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்தார்கள். ஆனால் இந்த மெய்யழகன் படத்தைப் பார்க்கும்போது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமமாக இருக்கும். படம் வெளியான பிறகு அர்விந்த் சாமியை ஒரு நடிப்பு அரக்கனாக பார்க்க முடியும். அவரது கதாபாத்திரத்தை அந்த அளவிற்கு வியந்து பார்ப்பீர்கள். இந்த படத்தின் ஒரு இடத்தில் கூட சோகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போது பல இடங்களில் உங்களை அறியாமலேயே அழுவீர்கள். நல்ல படங்களை பார்த்ததும் அதை உச்சி முகர்ந்து வரவேற்கும் பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் றெக்கை கட்டி பறப்பார்கள்” என்று கூறினார்.
நடிகை ஸ்ரீதிவ்யா பேசும்போது,
“96 படம் எந்தவிதமான மேஜிக்கை நிகழ்த்தியது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் அதுபோல என்ன செய்யப் போகிறது என்று பார்ப்பதற்கு உங்களை போல நானும் ஆவலாக இருக்கிறேன். எனக்கு ரொம்ப நாள் கழித்து இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. கமல்ஹாசனின் அருமையான பாடல் வேற லெவலில் இருக்கிறது. கேட்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருந்தேன். என்னை அறியாமலேயே என் சின்ன வயதிற்கு சென்று விட்டேன். அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அந்த உண்மையான அன்பை அதற்குப் பிறகு இப்போது வரை அனுபவித்ததில்லை. இதுவரைக்கும் அந்த உண்மையான அன்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். அது கிடைத்ததில்லை. அதை இந்த பாடல் தொட்டது. இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது,
“96 படத்திற்கு பிறகு 6 வருடம் கழித்து இப்போதுதான் மீடியா முன் நிற்கிறேன். கடந்த நவம்பர் மாதம் படத்தை தொடங்கி இந்த செப்டம்பரில் அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம். 96 படத்தில் நடித்த நட்சத்திரங்கள் யாரும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவதர்ஷினியை தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அதேபோல முதலில் இந்த படத்தில் இருக்கும் ஒரு தங்கை கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதிவ்யாவை அணுகினோம். அந்த சமயத்தில் அவரிடம் தேதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து இப்போது அவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக அணுகியபோது உடனே ஓகே சொன்னார். இந்த நேரத்தில் ஏன் இந்த படம் என்றால்..!
சமீப காலமாக சோசியல் மீடியாக்களிலும் வெளியிடங்களிலும் வெறுப்பு சிந்தனை பரவி வருவதை பார்க்க முடிகிறது. அன்பு தான் இதை மாற்றும். இந்த படம் அன்பை பற்றி பேசுகிறது. படத்தின் டைட்டிலில் இருந்து எல்லா விஷயங்களிலும் தமிழை முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு காரணம் தமிழ் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டே இருக்கிறது. மெய்யழகன் படம் அதை மாற்ற முயற்சி செய்யும்” என்று கூறினார்.
நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,
“இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன். கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்த போது மட்டுமல்ல, அதன் பிறகு தற்போது வெளியேயும் நல்ல உறவில் நெருக்கமாகி விட்டோம். கார்த்தி அண்ணா என்னைப் பற்றி உங்களிடம் ஏதாவது சொல்வார். ஆனால் அதை எல்லாம் நம்பாதீர்கள். அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பதாக சொன்னீர்கள் ஆனால் அப்படி கேட்பவர்களுக்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது என்று நினைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
“96 எல்லோருக்கும் பிடித்த படம். கதை, உரையாடல் என ஒவ்வொரு விஷயத்தையும் பிரேம்குமார் பார்த்து பார்த்து இழைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நாள் ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் தான், பிரேம்குமார் இப்படி மெய்யழகன் படத்திற்காக பிரேம் ஒரு கதை வைத்திருக்கிறார் என என்னிடம் கூறினார். உடனே அவரை நானே நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். 96 படம் வெளியான பிறகு இந்த கதைக்காகவே ஆறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் பிரேம் குமார். எப்படி அவரை தயாரிப்பாளர்கள், மற்ற ஹீரோக்கள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. இதிலிருந்தே அவர் புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி பொருட்காட்சியில் இருக்கும் ஒரு அரிய பொருளை போன்றவர் அவர்.
இந்த ஸ்க்ரிப்ட்டை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் கொட்டியது. அனேகமாக கோவிட் சமயத்தில் இந்த கதையை பிரேம் எழுதியிருப்பார் போல. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் என சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்கு செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். எல்லோரும் இந்த படத்தில் எப்படி நடித்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு கமர்சியலான படம், இதில் ஏன் நான் நடிக்க கூடாது ? கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார் அதற்கடுத்து இப்போது இந்த மெய்யழகன் படத்தில் தான் பல நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில்ல் கலந்து கொண்டேன். ஆனால் இதில் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை.
நானும் அர்விந்த்சாமி சார் பேசும்போது கூட இந்த காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை அப்படியே குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். படம் முழுவதும் அத்தான் அத்தான் என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் ஒரு கதாபாத்திரம் எனக்கு. திண்டுக்கலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே உள்ள பேமஸான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை 8 மணிக்கே பிரியாணி வாங்கி கொடுத்து அசத்தினார்.
96 படத்தின் காதலே காதலே பாடல் இப்போதும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. அதுபோல மெய்யழகன் பாடலையும் ஊருக்குப் போகும்போது கேட்டுக்கொண்டே போவார்கள். இந்த பாடலுக்கு கமல் சாரே ஏற்படுத்திய வேல்யூவுக்கு நன்றி. ராஜா சார் காதல் இல்லாமல் பிரேம்குமார் கதையை எழுதவே மாட்டார்.. இதிலும் அது நடந்திருக்கு” என்று கூறினார்.
நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி
Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் …
ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது...
முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சமுத்திரகனியுடன் பணியாற்றியதும் நல்ல அனுபவம். ஜிப்ரானின் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
எடிட்டர் நெல்சன் ஆண்டனி பேசியதாவது...
எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அண்ணன் சசிகுமார் படங்களை ரசிகனாக பார்த்திருக்கிறேன் அவரது படத்தை ரஷ்ஷாக பார்த்து, எடிட் பண்ணியது புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநருக்கு தான் நன்றி. பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள் இங்கு இவர்களுடன் இருப்பதற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
கலை இயக்குநர் உதயகுமார் பேசியதாவது...
இந்தப் படத்தில் என்னை பரிந்துரை செய்த இணை இயக்குநர் குரு அவர்களுக்கு நன்றி. அண்ணன் சசிகுமார் அவர்களுடன், நான் மூன்று வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் வினோத் அவர்களின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நான் அசிஸ்டெண்டாக பணியாற்றினேன். அவர் இருக்கும் மேடையில் கலை இயக்குநராக நான் இருப்பது, எனக்கு பெருமை. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் நிலா சுதாகர் பேசியதாவது...
இத்திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சரவணன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக. இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள், மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். வாழ்வியலைச் சொல்லும் படமாக, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சரவணன் மற்றும் சசிகுமார் அவர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மகிழ்ச்சி. படத்தில் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது, உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
Think Music சந்தோஷ் பேசியதாவது...
இந்த மேடை ரொம்ப ஸ்பெஷல். இரா. சரவணன் மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார், நீங்கள் பாருங்கள் என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் பிக்ஸ் செய்யாமல் இருந்தது, எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூட செய்யாமல், அந்த படத்தை பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் இப்படி எல்லாம் ஊர் பக்கம் நடக்கிறதா? என்று கேட்டேன். ஆம் ஊர் பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம் என்றார்கள். படத்திற்கு இசை பற்றி பேச்சு வந்தது, எனக்கு ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. சரவணனும் அவர் கண்டிப்பாக சரியாக இருப்பார் என்றார். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளை.. காட்சிகளை.. இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் பேசியதாவது...
ஒரு சினிமா நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கும் என்பதை, மீண்டும் மீண்டும் ஒரு நல்ல சினிமா சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்க எல்லாம் சென்னையிலேயே பிறந்து எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம், ஆனால் கிராமத்து பக்கம், இன்னும் இது மாதிரி சம்பவங்கள், தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஒரு படமாக உங்கள் முன்னால் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இரா. சரவணன் போன்ற இயக்குனர்கள் இருப்பது மகிழ்ச்சி. இயக்குனர் இரா சரவணனின் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களுக்கு நான் ரசிகன். விஷுவலாகவும் திரைப்படத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மாற்றத்தை பேசும் மாமன்னர்கள் இருக்கும் சமூகத்தில் அதை அடிமட்டத்தில் இருந்து சமத்துவத்தை பேசும் நந்தனார்களும் நமக்குத் தேவை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசியதாவது...
இயக்குநர் இரா. சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், நாம் நிறைய பேரோடு பழகுவோம், ஆனால் சிலருடன் மட்டும்தான் நெருக்கமாக இருப்போம், அந்த வகையில் இரா. சரவணன் மிக அற்புதமான நண்பர், அவரோடு நிறைய சினிமா பற்றி பேசுவேன். 'உடன்பிறப்பே' படத்திற்கு பிறகு, அவர் பெரிய இடத்தை அடைவார் என வாழ்த்தினேன். இப்போது 'நந்தன்' படத்திற்கு பிறகு, அவருக்கு அந்த இடம் கிடைக்கும். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி, இந்த படத்தை அவர் செய்துள்ளார். நடிகர்கள், தயாரிப்பு குழுவினர், படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது...
படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும், படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் இப்படத்தை தொடங்கினார், அவர் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார்.
இந்த கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், 'சோப்புலிங்கம்' கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார், நான் தயங்கினேன். முதன்முதலில் சமுத்திரகனி தான் என்னை நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை, நான் ஒரு இயக்குனர் தான், நன்றாக நடித்தேன் என அவர்கள் சொன்னால் மகிழ்ச்சி. இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது.
சரவணன் தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்த திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். '16 வயதினிலே' படத்திற்கு பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்த திரைப்படத்திற்காக தந்திருக்கிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை, உண்மையாகவே மிக அற்புதமான திரைப்படம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசியதாவது...
அனைவருக்கும் வணக்கம், இந்த மேடை எனக்கு மிக மிக முக்கியமான மேடை. ரொம்ப ரொம்ப எமோஷனல் ஆக உள்ளது. ஒரு புதிய முகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது, மிகப்பெரிய விசயம், ஆனால் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்தார் இயக்குநர் சரவணன் சார், அவருக்கு நன்றி. திரைத்துறைக்கு வந்த பிறகு, இது மிகப்பெரிய இண்டஸ்ட்ரி, இதில் தினமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது, ஆனால் என்றென்றைக்கும் இந்த திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும், ஆதரவு தந்ததற்கும், அனைவருக்கும் என் நன்றிகள். சசிகுமார் சாரை, வேறு நிறைய படங்களில் ஹீரோவாக பார்த்திருக்கிறேன், ஆனால் கூட நடிக்கும் போது, மிக மிக எளிமையாக என்னிடம் பழகினார், நிறைய சொல்லித் தந்தார். மிக ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றிகள். இந்த படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக உங்களை இந்த படம் மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.
Trident Arts ரவீந்திரன் பேசியதாவது...
இந்த படத்தை பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாது. சசி சார் கூப்பிட்டு, சார் ஒரு படம் செய்திருக்கிறேன், வந்து பாருங்கள் என்றார். படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கூட அப்போது ரெடியாகவில்லை, இது கமர்சியல் படம் இல்லை, வித்தியாசமான படம் பாருங்கள் என்றார். படம் பார்த்து அதிர்ந்து விட்டேன். தமிழ் சினிமாவுக்கு என, சில மரபுகள் இருக்கும், படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு, என காட்சி வைப்பார்கள், ஆனால் இந்த படத்தில் காலணியை குளோசப்பில் காட்சிபடுத்தி இருந்தார்கள். படம் முடிக்கும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது, எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்த படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர, மிகவும் மெனக்கெட்டு, இப்படத்தை செய்துள்ளார்கள். படத்தில் யாருமே நடிகர்களாக இல்லை, ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். சசிகுமார் அப்படியே உருக்கிவிட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து, பிரமிப்பது புதிதாக இருந்தது. எங்களின் அனைத்து படத்திற்கும் தந்த ஆதரவைப் போல, இந்த படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஹெச். வினோத் பேசியதாவது...
நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் "உடன்பிறப்பே" மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் இரா சரவணன் பேசியதாவது...
சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை, இது இதுதான் எனக்கு முதல் மேடை, முதல் இரண்டு படங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் பேச வேண்டிய விசயங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் பேசி விட்டார்கள். அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்த திரைப்படத்தை பார்த்து, பாராட்டிய அன்றுதான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தை செய்திருக்கிறோம், என்ற நம்பிக்கை வந்தது. அண்ணனுக்கு என் நன்றிகள்.
ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணைக்கு கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள், ஆனால் Trident Arts ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார், சார் உங்கள் மனதுக்கு என் நன்றிகள்.
இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும், ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு, கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன். முழு மக்களின் கூட்டத்திற்கு நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.
இந்த படத்தை நாங்கள் எடுத்தோம் என்றாலும், இந்த படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இன்று இந்த மேடை வரை கொண்டு வந்தது, Think Music சந்தோஷ் அவர்கள் தான். அவர் எத்தனையோ பேருக்கு, நல்லது செய்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவர்தான் ஜிப்ரானையும் பரிந்துரைத்தார். நான் முதலில் இந்த படத்திற்கு இமான் அவர்களை அணுக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சந்தோஷ்.. ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் என்றார். அவர் எப்படியும் படம் பார்த்துவிட்டு முடியாது என்று தான் சொல்வார் என்று நினைத்துதான் படத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் படத்தை பார
வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது .
தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது.
வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.இரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…
என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்.
நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது....
இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது…
மூன்று நாள் தான் நடித்தேன். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது நம் பார்லிமெண்ட் ஞாபகம் வரும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்.
இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…
புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச்சிறந்த படமென இதைச் சொல்வேன். எல்லோருமே புதுப்பேட்டை மாதிரி ஒரு படம் வரவில்லையே எனக்கேட்பார்கள், அவர்களுக்கான பதில் தான் இந்தப்படம். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கும். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும். ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. இந்தக்குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர். என் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…
ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர் சி சாருடன் தான் பார்த்தேன், உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன். அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்.
நடிகர் ஹரீஷ் உத்தமன் பேசியதாவது…
ஹிப்ஹாப் ஆதி சினிமாவுக்கு வந்ததிலிருந்து, அவர் செய்த ஒவ்வொரு விசயத்திலும், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சொல்லுணும் என்று தான் செய்வார். இந்தப்படத்தில் நடிக்கும் முன், இப்படத்தில் ஃப்ரீ விஷுவல் காட்டினார் அதுவே எனக்குப் பிரமிப்பைத் தந்தது. அவர் எப்படி தான் இவ்வளவு வேலை செய்கிறார் எனத் தெரியவில்லை, இந்தப்படத்தில் பிரக்யோக் சிங் எனும் கேரக்டர் செய்துள்ளேன், தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிங் கேரக்டர், பிஸிகலாக சவாலான கேரக்டர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இன்று ஹிப் ஹாப் தமிழா ஒரு பிராண்ட் என்பதை விட, ஒரு மூவ்மெண்ட் என்பதாகத் தான் பார்க்கிறேன். இளைஞர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஜீவாவும் ஆதியும் எனக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் வாழ்த்துகள்.
நடிகர், நடன இயக்குனர் கல்யாண் பேசியதாவது..
நான் நடித்து பல வருடமாகிவிட்டது. ஆதி சொன்ன பிறகு, இந்தப்படத்தில் நடித்தேன். இவ்வளவு சின்ன வயதில் மிக மெச்சூர்டாக படம் செய்வது, மிகப்பெரிய விசயம். மொத்த டீமும் அவ்வளவு சிரத்தையாக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப்படத்தில் நட்டி சாருடன் ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் குமரவேல் பேசியதாவது..,
மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. சுந்தர் சி இரண்டு நல்ல மனமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது மொத்த டீமும் அற்புதமாக உழைத்துள்ளார்கள்.
நடிகர் இளங்கோ குமரன் பேசியதாவது..,
20 வயது ஆட்களை மட்டுமல்ல, 60 வயதில் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆதி தான். எனக்கு நடிப்பு தெரியாது, ஆனால் என்னை நடிகனாக்கியது அவர்தான். என்னை மிக மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். சிவகுமாரின் சபதம் படத்தில் என்னை முழு நேரப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் மீண்டும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர் பயணத்தில் தொடர்ந்து நாங்களும் இருப்போம். அனைவருக்கும் நன்றி.
நடிகர் சாரா பேசியதாவது…
கடைசி உலகப் போர். ஆதி ப்ரோ இயக்கி நான் ஹீரோவாக நடிச்சிருக்க படம், நான் இங்கு நிற்க காரணம் மூன்று பேர். என்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், என்னை உலகம் அறிய வைத்த ஆதி, என்னை பயன்படுத்தச் சொன்ன சுந்தர் அண்ணா மூவருக்கும் நன்றி. ஆதியுடன் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கும், மிக ஃபிரண்ட்லியாக இருப்பார். சித்தர் ஜீவா ஆசையே இல்லாத மனிதனாக என்னைப் பிரமிக்க வைக்கிறார். எனக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடிகை அனகா பேசியதாவது…
ஆதி உடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. ஜீவா முதல் படக்குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் நன்றி.
ஒளிப்பதிவு அர்ஜூன்ராஜா பேசியதாவது…
இந்தக்கதை சொல்லும் போதே வித்தியாசமாக இருந்தது. புதிதாக ஒரு விசயத்தை முயற்சி செய்துள்ளோம். இப்போது நீங்கள் பார்க்கும் தியேட்டரில் ஸ்கோப் வரும், மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும். இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை, நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா சாரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா. தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா.
அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘சுயம்பு’ படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்கிறார். தாகூர் மது வழங்கும் இப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவனும் ஸ்ரீகரும் தயாரித்துள்ளனர்.
சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர். போர் பின்னணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல்தர தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது.
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ’கேஜிஎஃப்’ மற்றும் ’சலார்’ படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, கே.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கா முட்டை, விசாரணை முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.
முன்னணி நட்சத்திர நடிகர் விமல், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
'கன்னிமாடம்' மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, சார் படத்தை உருவாக்கியுள்ளார்.
போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தை இம்மாத இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பட வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!
நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான 'காந்தா' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது,
“'காந்தா'வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக 'காந்தா' இருக்கும்" என்றார்.
வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனர்- நடிகர் துல்கர் சல்மான், “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை 'காந்தா'வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு" என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், "இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. 'காந்தா' மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்" என்றார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக 'காந்தா' படம் உள்ளது. இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் 'காந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘ரகுதாத்தா’வை பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம். ரகுதாத்தா தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.
வள்ளுவன்பேட்டை என்ற அழகிய கிராமத்தில் ‘ரகுதாத்தா’ கதை விரிகிறது, அங்கு கயல்விழி (கீர்த்தி சுரேஷ் நடித்த) மரியாதைக்குரிய வங்கி ஊழியராக பணிபுரிகிறார், இந்தி திணிப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்காக, மக்களிடம் பிரபலமாக இருக்கிறார். தன் முற்போக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொறியியலாளர் தமிழ்செல்வனை (ரவீந்திர விஜய்), திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொள்கிறபோது, அவளுடைய வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. ஒரு திடுக்கிடும் ரகசியம் தெரியவரும் வேளையில், கயல் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி வருகிறது, அவள் எதிர்த்துப் போராடிய இந்தியை கற்க வேண்டும் மற்றும் பரீட்சை எழுத வேண்டும் எனும் நிலை வருகிறது. இந்நிலையில் கயல் என்ன செய்வாள்? அவளுடைய நீண்டகால நம்பிக்கைகள் அல்லது எதிர்பாராத சமரசம்? எதை நோக்கி செல்வாள். நவீன இந்தியாவில் மொழி அரசியல், பாலினப் பாகுபாடுகள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்கு இப்படம் களம் அமைக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில்..,
பெண் சுதந்திரத்தை நம்பும் “கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ZEE5 இல் காணவுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்.
ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், "ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்காக ZEE5 உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ZEE5-ன் விரிவான ரசிகர்கள் களம் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சாதனை, எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. 'ரகுதாத்தா' எங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான திரைப்படமாகும், ஏனெனில் இது முக்கியமான சமூகப் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாகும் அதே நேரத்தில் நகைச்சுவையுடன் உரையாடுகிறது, மேலும் ZEE5 மூலம் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் 'ரகுதாத்தா' படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
'ரகுதாத்தா' படத்தின் இயக்குநர் சுமன் குமார், 'ரகுதாத்தா' இப்படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ்செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் இந்த கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். ZEE5 இல் இப்படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.
“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.
'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு
கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.
ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கிறது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், '' இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் 'புஷ்பக விமானம் ' எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.
'புஷ்பக விமானம்', 'மழைக்கால ராகம்' போன்ற படங்களை தயாரித்த விக்யாத், 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு... இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது'' என்றார்.
நடிகர் கணேஷ் பேசுகையில், '' கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் - தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
'யுவர் சின்சியர்லி ராம்' படத்தில் முதல் தோற்றம் வெளியாகி குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையான கலைஞர்களுடன் சாண்டல்வுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' உருவாகி வருகிறது. இயக்குநர் விக்யாத் இயக்கத்தில் ரமேஷ் - கணேஷ் கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படம்- பெரிய திரையில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
- உலக செய்திகள்
- |
- சினிமா