சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடியும் - மிர்ச்சி விஜய்
Updated on : 29 July 2024

நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். 



 



மிர்ச்சி விஜய் கூறும்போது, ”வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த அனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். படக்குழுவில் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். அனந்த் இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.  இந்தப் படம் வெளியான பின்பு இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக அனந்த் இருப்பார் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 2 அன்று படத்தைத் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.



 



'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸூடன் இணைந்து மசாலா பாப்கார்னின் ஐஸ்வர்யா. எம் & சுதா. ஆர் ஆகியோர் தயாரித்துள்ளனர். 



 



லீலா, குமரவேல், விசாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பாட், தேவ், கேபி பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபெனி ஆலிவர், தர்மா, வினோத், பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ் மற்றும் தங்கதுரை ஆகியோருடன் வெங்கட் பிரபுவும் ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா