சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட 'அந்தாதுன்' படத்தின் புதிய தமிழ் வடிவம் 'அந்தகன்'!
Updated on : 08 August 2024

கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும்  இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



 



இந்நிலையில் 'அந்தகன்' வசனகர்த்தா பட்டுக்கோட்டை  பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட 'அந்தாதுன்' படத்தின் புதிய தமிழ் வடிவம் 'அந்தகன்'! அந்தப் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.



 



நாணயமிக்க தயாரிப்பாளரும்,(இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே என் ஊதியத் தொகையைக் கொடுத்தாராக்கும்) . நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குனருமான திரு. தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன். 



 



இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார்..! பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரிம் மனதின் மென்மை பஞ்சை விட இலகுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார் . அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கி இருக்கிறார்.



 



நாயகன் பிரஷாந்தும் படு பிரண்ட்லி.. ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதாவர் என்பதே அவரின் பலம்.. அதிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது.. அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை தத்தெடுத்து வீட்டிலே வைத்து வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் பிரஷாந்த் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பியானோ வாசிக்கும்  காட்சிகள் எல்லாம் வேற லெவல். மொத்ததில் இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குனர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் வெற்றி வலம் வருவார். எனவே வெற்றிக்கு வாழ்த்துங்கள்.திரையரங்கில் படம் பார்த்து ஆதரியுங்கள். நன்றி’’என்றார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா