சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

மலையாள உட்ச நட்சத்திரங்கள் மற்றும் திறமைமிகு இயக்குநர்கள் இணைந்து பணியாற்றிய படைப்பு!
Updated on : 17 August 2024

இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 , மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும், வரலாற்றுப் படைப்பான  ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வசீகரிக்கும் இந்த தொகுப்பின்  ஒரு கதையில்  தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V  நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது. மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்துக்காட்டினார், அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.



 



கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பின்னணியில், மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும், ஒரு அற்புதமான சினிமாப் பயணமாகும். மதிப்பிற்குரிய எம்.டி அவர்களால் எழுதப்பட்ட கதைகளை ஒருங்கிணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் மற்றும்  திறமைமிகு  இயக்குநர்கள் இந்த படைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இது மனித நடத்தையின் முரண்பாடுகளை ஆராய்கிறது, ஆழ்ந்த இரக்கம் மற்றும் அடிப்படை உள்ளுணர்வு ஆகிய இரண்டிற்கும் இடையிலான பதற்றத்தை ஆராய்வதன் மூலம், இந்தத் தொடர் மனிதகுலத்தின் செழுமையான, நுணுக்கமான சித்தரிப்பை வழங்குகிறது, அது உலகளாவிய அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் எதிரொலிக்கிறது. முதன்முறையாக, ZEE5 இல் இந்தியளவில்  புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு ஒன்று சேர்ந்துள்ளது.



 



பத்ம விபூஷன், டாக்டர் கமல்ஹாசன் ஒன்பது அழுத்தமான கதைகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அறிமுகப்படுதுகிறார்.  : 'ஒல்லவும் தீரவும்' (சிற்றலைகள் மற்றும் நதிக்கரை), கதையில் புகழ்பெற்ற மோகன்லால் நடிக்க,  இயக்குநர்  பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'கடுகண்ணவ ஒரு யாத்திரை குறிப்பு' (கடுகண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில்  நட்சத்திர நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். 'ஷிலாலிகிதம்' (கல்வெட்டுகள்) கதையில்   பிஜு மேனன், சாந்திகிருஷ்ணா மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோர் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.  'காட்சி' (பார்வை) கதையில்   பார்வதி திருவோது மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிக்க, தொலைநோக்குப் படைப்பாளி ஷியாமபிரசாத் இயக்கியுள்ளார்.  'வில்பனா' (தி சேல்) கதையில்  அஸ்வதி நாயர்  இயக்கத்தில் மது மற்றும் ஆசிப் அலி நடித்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கிய 'ஷெர்லாக்' கதையில் பன்முக திறமையாளர் ஃபஹத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து ஆகியோர் நடித்துள்ளனர்.  'ஸ்வர்கம் துறக்குன்ற நேரம்' (சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் போது) கதையில்   ஜெயராஜன் நாயரின் இயக்கத்தில் கைலாஷ், இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, என்ஜி பணிக்கர் மற்றும் சுரபி லட்சுமி உள்ளிட்ட குழுவினர் நடித்துள்ளனர்.  'அப்யம் தீடி வேண்டும்' (மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) கதையில்  புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக், இஷித் யாமினி மற்றும் நசீர் நடித்துள்ளனர்.  'காதல்க்காட்டு' (கடல் தென்றல்) கதையினை இந்திரஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில், ரதீஷ் அம்பாட் இயக்கியுள்ளார்.



 



இந்நிகழ்வினில் மோகன்லால் கூறுகையில் , “எம்டி சார் எழுதிய இந்தக் கதைக்காக என்னை அணுகியபோது, ​​அவருக்கு குரு தட்சிணையாக இதைச் செய்ய ஆசைப்பட்டேன். மனோரதங்கள் ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது. இந்த தனித்துவமான திட்டமானது ஓடிடி ஊடகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்பது திரைக்கதைகளைக் கொண்டுள்ளது, அவை இப்போது இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்த காலமற்ற கதைகளை, இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கப் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



 



ZEE5  பற்றி





ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா