சற்று முன்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |   

சினிமா செய்திகள்

நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள '1000 பேபிஸ்' ஃபர்ஸ்ட் லுக்!
Updated on : 22 August 2024

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "1000 பேபிஸ்" சீரிஸ்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். "1000 பேபிஸ்" சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. 



 



"1000 பேபிஸ்"  சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர்  நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள்.  ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத்  தயாரித்துள்ளனர். 



 



நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா

ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.



 



ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையுடன், தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஃபசல் A பேக்கரின் ஒலி கலவையில், "1000 பேபிஸ்" சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது.  விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  "1000 பேபிஸ்"  சீரிஸை கண்டுகளியுங்கள் !



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 





டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா