சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
Updated on : 02 September 2024

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு  இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட  தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.



 



கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான  விவரங்களுடன்,  தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நீ

நிரூபிக்கும்படி அமைந்துள்ளது. 



 



இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல்   எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது  போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும்  தொகுத்து தந்துள்ளார் இயக்குநர் அனுப் பண்டாரி.



 



இப்படம் பற்றி இயக்குநர் அனுப் பண்டாரி கூறுகையில்..,



‘விக்ராந்த் ரோனாவுக்குப் பிறகு நிரஞ்சன் ரெட்டி மீண்டும்  என்னுடன் படம் செய்ய விரும்பினார், இதற்கு முன்பு நாங்கள் ஹனுமான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் சமயத்தில் சந்தித்தோம். எனது அடுத்த படமும் பாட்ஷா கிச்சா சுதீப்புடன் தான் இருக்கும் என்று கூறியதும், பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவையும் அதன் உலகத்தையும் பற்றி சொன்னதும், அவர் சிலிர்த்துப் போனார். அவரது  அடுத்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் செய்ய விரும்பினர், அதற்கு பில்லா ரங்கா பாட்ஷா சரியாக இருக்குமென்று கூறினார். 



 



பாட்ஷா கிச்சா சுதீப்புடன் இணைவது குறித்து அனுப் கூறுகையில், ‘சுதீப் சாருடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் சார் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால்  எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது. 



 



தயாரிப்பாளர்கள் கூறுகையில்…



கிச்சா சுதீப்புடன் அனுப் பண்டாரி மீண்டும் இணைகிறார் என்று முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். விக்ராந்த் ரோனா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இந்த கூட்டணி  ஏற்கனவே ரசிகர்களிடம் வரவெற்பைக் குவித்துள்ளது. பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவைக் கேட்டதும், இது நாம் தயாரிக்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அதை செயல்படுத்தி விட்டோம். சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைவது எப்போதுமே ஒரு சிறந்த வாய்ப்பு. படப்பிடிப்பு தொடங்குவதற்கும், பில்லா ரங்கா பாட்ஷாவின் உலகத்தை எங்கள் பார்வையாளர்கள் அனுபவிப்பதற்காகவும் காத்திருக்கிறோம். 



 



பில்லா ரங்கா பாட்ஷா அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு  மிக விரைவில் துவங்கவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா