சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு
Updated on : 09 September 2024

கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.  உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.



 



ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கிறது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது. 



 



இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், '' இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் 'புஷ்பக விமானம் ' எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது.  இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌



 



 'புஷ்பக விமானம்', 'மழைக்கால ராகம்' போன்ற படங்களை தயாரித்த விக்யாத், 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு... இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது'' என்றார். 



 



நடிகர் கணேஷ் பேசுகையில், '' கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார். 



 



பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் - தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 



 



இந்த திரைப்படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம்  கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். 



 



'யுவர் சின்சியர்லி ராம்' படத்தில் முதல் தோற்றம் வெளியாகி குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. திறமையான கலைஞர்களுடன் சாண்டல்வுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' உருவாகி வருகிறது. இயக்குநர் விக்யாத் இயக்கத்தில் ரமேஷ் - கணேஷ் கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படம்-  பெரிய திரையில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா