சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!
Updated on : 17 September 2024

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின்  இரண்டாம் பாகமான  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாகத் தொடர்ந்து ஸ்ட்ரீமாகவுள்ளது.



 



பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’.



 



இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாகப் பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது.  சமீபத்திய வெளியீடுகளான 'ரகுதாத்தா', 'நுனக்குழி' உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து,  இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் "டிமான்ட்டி காலனி 2" படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல்  "டிமான்ட்டி காலனி 2" படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  இந்தப் படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி,  ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில்  ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.  அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில்,  பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் நிறுத்திய, 'டிமான்ட்டி காலனி 2', ஒரு பயங்கரமான தலைசிறந்த ஹாரர் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.  இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து,  தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெற்றது. செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் மட்டும், லார்ட் டிமான்டேவின் வருகையைக்  கண்டுகளிக்கத் தயாராகுங்கள்!



 



ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 



'டிமான்ட்டி காலனி 2' படத்தினை எங்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக ZEE5 இல் தமிழ் மற்றும் தென்னிந்திய உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் முந்தைய படத்தின் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, முதல் படத்தினை விடவும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 



 



டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து கூறுகையில்.., 



திரையரங்குகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், இப்போது ZEE5 இல் பெரிய அளவிலான பார்வையாளர்களே சென்றடைவது மகிழ்ச்சியளிக்கிறது. ZEE5 மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த அனுபவத்தை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய ZEE5 நம்பமுடியாத தளத்தை வழங்குகிறது.  இந்த பரந்த ரீச் எங்கள் படத்தை, இன்னும் கூடுதலான திகில் ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கும், மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, இந்த அட்டகாசமான அனுபவத்தைப் பெறலாம். ரசிகர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். 



 



டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகரான அருள்நிதி கூறுகையில்.., 



“டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது.  மேலும்  ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு  பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இந்த இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது.   திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ZEE5 மூலம்  இந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தையும் மாறுபாட்டையும் பரந்த பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா