சற்று முன்
சினிமா செய்திகள்
அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு
Updated on : 05 October 2024
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர்.
'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா' ஆகிய படங்களுக்கு இசையமைத்து பான் இந்திய அளவிலான இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான பின்னணி இசை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஹேஷாம். இவர் இசையில் உருவான பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், 'ஒன்ஸ்மோர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனால் இந்தப் படத்தின் பாடல்களுக்கும், ஆல்பத்திற்கும் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஒன்ஸ்மோர்' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் - இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்- அதிதி ஷங்கர்- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கு திரையுலக பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் யூகிக்க வேண்டாம் - நடிகை ரெஜினா காசண்ட்ரா!
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார்.
தன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றவர் ரெஜினா. இந்தப் படத்திற்காக, இன்னும் கடுமையாக உழைத்திருக்கிறார். “இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது”.
அஜர்பைஜான் நாட்டின் கிளைமேட் பற்றி கேட்டபோது, “அஜர்பைஜானில் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தியபோது சரியான நேரத்தில் மாலைக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். மகிழ் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சரியாக திட்டமிட்டு அதை முடித்தோம்”.
ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “படத்தில் மூன்று ஜார்ஜியன் ஸ்டண்ட்ஸ் மேனுடன் ஒரு ஆக்ஷன் சீக்வன்ஸ் உண்டு. அதற்கான இன்புட்ஸை படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டுவிட்டு ஒரே டேக்கில் அந்த காட்சியை அர்ஜூன் சார் செய்து முடித்தார். அந்த ஸ்டண்ட் மேன்ஸ் அவரது ஆக்ஷன் மற்றும் வயதை கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விட்டனர்” என்றார்.
நடிகர் அஜித்துடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “அவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார். முதல் நாளில் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரை நட்புடன் எங்களுடன் பழகினார்” என்றார்.
’விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணம், சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' பட முதல் பார்வை போஸ்டர்
நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. 'பெங்களூர் டேய்ஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ காதல் கண்மணி', 'மகாநடி', 'குரூப்' மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது.
'ஹண்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் 'காந்தா' படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் 'காந்தா' படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்" என்றார்.
இந்த திரைப்படத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது. நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி. ராமாநாயுடுவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் நடிகர் துல்கர் தலைமையிலான வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. பல திறமையாளர்களை இந்த நிறுவனங்கள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அதில் 'காந்தா' மறக்க முடியாத படமாக இருக்கும்.
'காந்தா' படத்தின் முதல் பார்வையைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'தென் சென்னை' டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில்!
புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை”.
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார்.
இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயர்ச்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர்.
இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நமக்கும் ஆட தோன்றும்
'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு வழங்குகிறார்.
எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடையும் வகையில் படக் குழுவினர் அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கதையின் நாயகியும் ,தனித்துவமான நடிப்புத்திறன் மிக்க நடிகையுமான சாய் பல்லவி பகிர்ந்து கொண்டதாவது....
இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன?
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. இந்த கதையின் மூல வடிவத்தை கோவிட் காலகட்டத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் என்ன சம்பவம் நடந்தது? என்ற விவரம் இடம் பிடித்திருந்தது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை அவர்களுடைய மனைவிமார்கள் எப்படி எந்தவித தொடர்பும் இல்லாமல் மீட்டு வந்தார்கள் என்று விசயம் இருந்தது. அதை படித்தவுடன் இதனை எப்போது செய்தாலும்.. இந்த உணர்வு ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன்.
ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறதே. இதற்கான காரணம் என்ன?
அதற்கு காரணம்.. அந்தக் கதை.. அந்த கதாபாத்திரம்.. அதன் இயக்குநர்.. இந்த மூன்றும் தான் முக்கிய காரணம்.
சாய் பல்லவியின் நடிப்பை போல் நடனமும் பிரபலம். இந்த திரைப்படத்தில் எப்படி..?
நடனத்தை பொறுத்தவரை நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும். விஜய் சார் சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன்.
நடன அசைவுகளை துல்லியமாக ஆட வேண்டும் என்பதை விட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.
இந்தப் படத்தில் பல நூறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது அது சவாலானதாகத் தான் இருந்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு நடனமாடும் போது என் சக கலைஞரான நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகை பார்த்தோம். அந்தப் பாடலில் என்னை விட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார்.
கிரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கிறீர்களே.. இதன் ரகசியம் என்ன? .
என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் பங்களிப்பு செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.
'தண்டேல்' திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கிறது. சண்டை காட்சிகள் இருக்கிறது. நடனமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உணர்வுபூர்வமான காதலும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்களின் உணர்வை பிரதிபலிப்பதால் 'தண்டேல்' தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெரும்!
ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் 'தண்டேல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த 'தண்டேல்' படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.
இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார் தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வழங்குகிறார்.
படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் படத்தைப் பற்றி தனது அனுபவங்களை நாயகன் நாக சைதன்யா பகிர்ந்து கொள்கிறார்.
சென்னையை பற்றி...?
சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலலானது. என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது.
இப்படத்தில் நடிக்க தூண்டுதலாக இருந்த விசயம் எது?
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள்.
வழக்கமான நாக சைதன்யாவை விட இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. இது தொடர்பாக..!?
இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் திரை தோற்றம் குறித்து இயக்குநர் சந்து என்னை சந்தித்தபோது விவரித்தார். அதைக் கேட்டவுடன் நடிகருக்கு தன் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் என நம்பினேன். படத்தின் கதையும் விசாகப்பட்டினத்தில் அருகே உள்ள ஸ்ரீ கா குளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம். இது என்னை மிகவும் கவர்ந்தது.
அதன் பிறகு ஸ்ரீ கா குளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறை- மொழி உச்சரிக்கும் பாணி- உடல் தோற்றப் பாணி- தொழில் சார்ந்த பாணி- ஆகியவற்றை குறித்து அவர்களிடம் உரையாடி தெரிந்து கொண்டேன்.
கடலுக்கு போகும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்வார்கள்? இதைப்பற்றியெல்லாம் விரிவாக கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ள தொடங்கினேன். இது என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னுடைய தோற்றமாகட்டும்... என்னுடைய உடல் மொழியாகட்டும்... என்னுடைய உள்ளூர் பேச்சு வழக்கு வசன உச்சரிப்பாகட்டும்... கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதிலேயே லயித்திருந்தேன். இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.
'தண்டேல்' படத்தில் நான் நடித்த ராஜு கதாபாத்திரம் என்னை பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்பான அத்தனை உணர்வுகளும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ஏற்பட்டது. மனிதர்களிடத்தில் பேரன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதையும் உணர்த்தியது.
இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இந்தப் படத்தின் கதை. இந்த படத்தின் பட்ஜெட். இதன் பிரம்மாண்டம். தயாரிப்பின் தரம்.. எல்லாம் எனக்கும், இயக்குநருக்கும் புதிது. இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாதது. மிகப் பெரிது. இது இயக்குநரின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.
சந்து எனக்காக நிறைய சிந்திப்பார். அவர் இந்த படத்தில் என்னை புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சியாகட்டும்... சண்டைக் காட்சியாகட்டும்... நடன காட்சியாகட்டும்.. சந்து எப்போது எனக்கு ஆதரவாகவே இருப்பார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிப்பை தவிர்த்து உங்களின் பொழுதுபோக்கு என்ன?
நடிப்பை தவிர்த்து கார் பந்தயங்களில் ஈடுபாடு உண்டு. இதற்காக நான் சென்னைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நடைபெறும் கார் பந்தயங்களை பார்வையிட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அது என்னுடைய பொழுதுபோக்கு மட்டும் தான். அதற்காக நான் முறையான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போது பந்தயக் கார்களை இயக்கிருக்கிறேன்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன்- எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அண்டை நாடான பாகிஸ்தான் அரசு கைது செய்து மீனவர்களை சிறையில் அடைக்கிறது. அவர்கள் எப்படி சிறையிலிருந்து மீண்டார்கள்? அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் போராட்டம் எப்படி இருந்தது? இந்த உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் 'தண்டேல்' திரைப்படம் தமிழக மீனவர்களின் உணர்வையும் பிரதிபலிப்பதால் இந்த திரைப்படம் தமிழகத்திலும் மாபெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!
பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், "ருத்ரா" கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் பொங்கி எழும் புயல் என வர்ணிக்கப்படுகிறது, கடந்த கால மற்றும் எதிர்கால காலங்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமானின் கட்டளையால் ஆளப்படும் இப்பாத்திரம் தெய்வீகத்தன்மை மற்றும் வலிமையின் சரியான கலவையாகத் திகழ்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸை மயக்கும் அவதாரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸ் ஒரு மலையின் உச்சியில் நின்று, கழுத்தில் ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, கையில் தடியை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். அவரது அமைதியான வெளிப்பாடு சிவனின் பின்னணியில் வித்தியாசமாக உள்ளது. இந்த அமைதி பிரமிக்க வைக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. இந்த போஸ்டர் அவரது பாத்திரம் பற்றிய ஆவலைத் தூண்டுகிறது.
மோகன் பாபு, அக்ஷய் குமார், மோகன்லால், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன் பாபு மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
#STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் TR ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”.
தயாரிப்பாளர் வினோத், “ஹீரோவில் இருந்து இயக்குநர் வரை என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி” என்றார்.
எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால் அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் வைசாக், "ராஜேஷ் சாருக்கு நன்றி. மக்களிடம் நிச்சயம் நல்ல படமாக போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்த படம் இது. படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இதற்கான பலன் தான் இந்த சக்சஸ் மீட். எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்திற்கு நன்றி".
திங்க் மியூசிக் சந்தோஷ், " இந்த வருடம் ஆரம்பித்திருக்கும் போது 'குடும்பஸ்தன்' படம் வார்ம் வெல்கமாக வந்திருக்கிறது. மணிகண்டனுடன் எங்களுக்கு நான்காவது படம். தனியிசைக் கலைஞராக இருந்து வைசாக் இசையமைப்பாளராகவும் அருமையாக இசை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, "படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி".
நடிகர் மணிகண்டன், " இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி" என்றார்.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .
மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம், “சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் - அவருக்கு ‘சென்னை 28’ பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் 'பறந்து போ' படம் மூலம் நடந்தது.
‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம், முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.
“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.
பிரபல இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…,
“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.
“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராமிற்கு நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் ராம் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.
அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.
இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!
SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் உள்ளன.
முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: இந்தியா - http://bit.ly/sunNXT
உலகின் பிற பகுதிகள் - http://bit.ly/ussunnxt
அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com
- உலக செய்திகள்
- |
- சினிமா