சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!
Updated on : 15 October 2024

'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் - எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.



 



'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி - ஏற்கனவே 'சிம்ஹா', ' லெஜண்ட்', 'அகண்டா' என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது. 



 



இந்நிலையில் பாலகிருஷ்ணா - பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக '# BB4 ' எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை 'லெஜண்ட்'  படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். 



 



நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான  தொடக்க விழாவில்  வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல்  விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 



 



#BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா