சற்று முன்

பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!   |    ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   |    டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!   |    'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |    பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
Updated on : 25 October 2024

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. 



 



லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்  காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.



 



ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத்  தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல்  சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை,  அடுக்குகளைக் கடக்க,  விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.



 



திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.



 



பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா