சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் 'சீதா பயணம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!
Updated on : 02 November 2024

அனைவரும் கொண்டாடி மகிழும், தீபாவளி நன்நாளில், மேலும் இனிமை சேர்க்கும் விதமாக,  குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.



 



நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த  போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது.  மகிழ்ச்சியான ஒரு இனிய பயணத்தை உறுதி செய்கிறது, இந்த போஸ்டர். 



 



பிரபல நட்சத்திர நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா  தயாரித்து, இயக்கும் “சீதா பயணம்” திரைப்படம், இதயம் நெகிழும் தருணங்கள் மற்றும் உலகளாவிய  பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை ஒன்றாக இணைத்து, ஒரு அருமையான  குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.  முன்னணி பிரபலங்களான சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது, கதைக்கு கூடுதல் ஈர்ப்பைக் கொண்டு வந்துள்ளது. 



 



நடிகை ஐஸ்வர்யா இத்திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அவரது வசீகரிக்கும் அழகு, ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்திழுக்கிறது.  இந்தத் திரைப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இப்படம் ஒரு இனிமையான காட்சி  அனுபவத்தைத் தரும். 



 



இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படம் தெலுங்கு - தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா